வீடு / சமையல் குறிப்பு / ஹைதராபாத் ஷாஹி காய்கறிகள் குழம்பு

Photo of Hyderabadi Shahi Mixed Vegetable Curry by Lubna Karim at BetterButter
5458
216
4.0(0)
0

ஹைதராபாத் ஷாஹி காய்கறிகள் குழம்பு

Nov-20-2015
Lubna Karim
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • ஹைதராபாத்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 10-12 சிறிய உருளைக்கிழங்கு தோலுரித்து சதுரமாக வெட்டியது
  2. 1/2 கப் பச்சை பட்டாணி
  3. 2 நடுத்தர அளவு காரட் வெட்டியது
  4. 2-3 பீன்ஸ் (பிரெஞ்சு பீன்ஸ்) 2 அங்குல துண்டுகளாக வெட்டப்பட்டது
  5. 1 சிகப்பு குடைமிளகாய் வெட்டியது
  6. 1 மஞ்சள் குடைமிளகாய் வெட்டியது
  7. 6 உலர்ந்த திராட்சை
  8. 2 தேக்கரண்டி தக்காளி கூழ்
  9. 2 தேக்கரண்டி பிரவுன் ஆணியன் விழுது
  10. 1 தேக்கரண்டி வறுத்த முந்திரி
  11. 1 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  12. 1 தேக்கரண்டி சிகப்பு மிளகாய்த்தூள்
  13. தேக்கரண்டி மஞ்சள்தூள்
  14. 1 தேக்கரண்டி கரம் மசாலா
  15. 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்
  16. தேக்கரண்டி சீரகத்தூள்
  17. 1/2 தேக்கரண்டி சீரகம்
  18. 1 பிரிஞ்சி இலை
  19. 1/2 கப் கடைந்த தயிர்
  20. 2-3 தேக்கரண்டி புதிய கிரீம்
  21. 2 தேக்கரண்டி புதிய கொத்தமல்லி நறுக்கியது
  22. உப்பு
  23. எண்ணெய்

வழிமுறைகள்

  1. சிறிய உருளைக்கிழங்கு, வெட்டிய காரட், பச்சை பட்டாணி, பீன்ஸ் மற்றும் இரண்டு சிட்டிகை உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் வைத்து வேகவிடவும். காய்கறிகளை மென்மையாகும் வரை வேகவைக்கவும். தண்ணீரை வடிக்கட்டி காய்கறிகளை தனியே வைத்துக் கொள்ளவும்.
  2. அடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி வேகவைத்த காய்கறிகளை அதில் லேசாக வதக்கவும் அப்போது காய்கள் மிருதுவாகவும் ஓரங்களில் பொன்னிறமாகவும் மாறும். இப்போது வெட்டிவைத்த சிகப்பு மற்றும் மஞ்சள் குடைமிளகாய் சேர்க்கவும். குடைமிளகாய் மிருதுவாகும் வரை வதக்கவும்.
  3. ஒரு கரண்டியைக் கொண்டு காய்கறிகளை தட்டில் தனியே எடுத்து வைத்துக்கொளவும். இப்போது மீதமுள்ள எண்ணெய்யை வாணலியில் ஊற்றி (தேவைப்பட்டால் 1 தேக்கரண்டி எண்ணெயை சேர்த்துக் கொள்ளவும்) பிரிஞ்சி இலை மற்றும் சீரகம் சேர்த்துக் கொள்ளவும், சீரகம் பொறிய தொடங்கியது பிரவுன் ஆணியன் விழுதை சேர்த்துக் கொள்ளவும். குறைவான தீயில் 1-2 நிமிடம் வருக்கவும்.
  4. இப்போது தக்காளி கூழ், சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் பொடி, கொத்தமல்லி தூள், சீரகம் தூள், உப்பு மற்றும் கரம் மசாலா சேர்க்கவும். எல்லாம் முழுமையாக சேரும் வரை கிளறிவிடவும்.
  5. இப்போது மரகரண்டியைக் கொண்டு வறுத்த காய்கறிகளை போட்டு லேசாக கிளறி விட வேண்டும். குறைந்த 2-3 நிமிடங்கள் அதை வேகவிடவும். இபோது வறுத்த முந்திரி பருப்பை சேர்த்து மறுப்படியும் கிளறி விடவும்.
  6. குறைந்த தீயில் ¾ சேர்த்து அவற்றை நன்கு வேகவிடவும். நன்கு மூடி பின்னர் 10 நிமிடங்கள் கழித்து மூடியை அகற்றவும்.
  7. இப்போது தயிர் மற்றும் உலர் திராச்சை சேர்க்கவும். 1-2 நிமிடங்கள் அதிக தீயில் அதை வேகவைக்க வேண்டும். தேவையென்றால் உப்பு சேர்க்கவும். தீயை குறைத்து புதிய கிரீமையும் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.
  8. அடுப்பை அணைத்து விட்டு சாதம், ரொட்டி, புரோட்டாவுடன் சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்