வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு மசாலா குழம்பு

Photo of Chettinad Masala Kuzhambu by Priya Suresh at BetterButter
2363
68
4.7(0)
0

செட்டிநாடு மசாலா குழம்பு

Nov-22-2015
Priya Suresh
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1/2 கிலோ கத்திரிக்காய் (சிறு துண்டுகளாக நறுக்கப்பட்டது)
  2. 2 உருளைக்கிழங்கு (சிறு துண்டுகளாக நறுக்கப்பட்டது)
  3. 15 சிறிய வெங்காயம்
  4. 5 பூண்டு பற்கள்
  5. 1 பே இலை
  6. 1/2 இன்ச் இலவங்கப்பட்டை
  7. 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  8. 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  9. கொஞ்சம் கறிவேப்பிலை
  10. எண்ணெய்
  11. சுவைக்கேற்ற உப்பு
  12. நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகள்
  13. அரைப்பதற்கு: 1/4 கப் தேங்காய்
  14. 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  15. 3 காய்ந்த மிளகாய்
  16. 1 தேக்கரண்டி மல்லி
  17. 1 வெங்காயம் (சுமாராக வெட்டப்பட்டது)
  18. 1 தக்காளி (சுமாராக வெட்டப்பட்டது)
  19. 5 முந்திரி பருப்பு

வழிமுறைகள்

  1. ஒரு தேக்கரண்டி எண்ணெயை சூடுபடுத்தி, நறுக்கப்பட்ட வெங்காயத்தையும் தக்காளியையும் 'அரைப்பதற்கு' கீழ் கொடுக்கப்பட்டதை மென்மையாகும்வரை வதக்கவும்.
  2. கிரைண்டருக்கு மாறு, 'அரைப்பதற்கு' கீழ் பட்டியலிடப்பட்ட மீதமிருக்கும் மசாலாக்களைச் சேர்த்து போதுமான தண்ணீர் சேர்த்து எல்லாவற்றையும் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  3. இப்போது கடாயில் எண்ணெயை சூடுபடுத்தி, பே இலை, பெருஞ்சீரகம், இலவங்கப்பட்டை சேர்த்து பொன்னிறமாகும்வரை வறுக்கவும். உடனே கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு சேர்க்கவும். சில நிமிடங்களுக்கு அவை பழுப்பு நிறமாகும்வரை வதக்கவும்.
  4. இப்போது கத்திரிக்காய் துண்டுகளைச்சேர்த்து எல்லாவற்றையும் மேலும் சில நிமிடங்கள் வதக்கவும். இப்போது ஒரு கப் தண்ணீர், மிளகாய்ப்பொடி, உப்பு சேர்த்து கொதி நிலைக்குக் கொண்டுவரவும்.
  5. ஏற்கனவே அரைத்த மசாலா சாந்தை சமைக்கயிருக்கும் காய்கறிகளுக்குக் கொண்டுவந்து கொதிக்கவிடவும் (இப்போது குழம்பின் அடர்த்தியை போதுமானத் தண்ணீர் சேர்த்து சரிசெய்யவும்). குழம்பை மூடியிட்டு சிம்மரில் எண்ணெய் பிரியும்வரை சமைக்கவும்.
  6. அடுப்பை நிறுத்திவிட்டு நறுக்கிய கொத்துமல்லி இலைகளைச் சேர்க்கவும்.
  7. சாதத்துடன் காரமான உருளை வறுவலுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்