வீடு / சமையல் குறிப்பு / கோதுமை காரக்குழி பணியாரம்

Photo of wheat kara kuzhipaniyaram by niranjana balachandar at BetterButter
1001
11
0.0(0)
0

கோதுமை காரக்குழி பணியாரம்

Nov-22-2015
niranjana balachandar
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு - 1 கப்
  2. ரவை 1/2 கப்
  3. கெட்டித் தயிர் 1/2 கப்
  4. வெங்காயம் 1 பெரியது
  5. கடுகு 1 தேக்கரண்டி
  6. சீரகம் 1 தேக்கரண்டி
  7. சமையல் சோடா 1/2 தேக்கரண்டி (அல்லது) ஈனோ பழ உப்பு 1 தேக்கரண்டி
  8. இஞ்சி 1/2 தேக்கரண்டி (நன்றாக நறுக்கப்பட்டது)
  9. எண்ணெய் 1 தேக்கரண்டி
  10. உப்பு 1/2 தேக்கரண்டி
  11. தேவையாள அளவு தண்ணீர்
  12. கொஞ்சம் கறிவேப்பிலை
  13. பச்சை மிளகாய் 2 (நன்றாக நறுக்கப்பட்டது)

வழிமுறைகள்

  1. மாவு, ரசை, தயிர், உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ளவும்.
  2. போதுமான தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும் அடர்த்தியான மாவு தயாரிப்பதற்காக, எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. இப்போது தாளிப்புக்குக் கடாயில் எண்ணெயை சூடுபடுத்திக்கொள்க.
  4. எண்ணெய் சூடானதும், கடுகையும் சீரகத்தையும் சேர்க்கவும்.
  5. வெடித்ததும், வெங்கயாம், கறிவேப்பிலை. பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
  6. 2 நிமிடங்களுக்கு வதக்கி மாவுடன் சேர்த்துக்கொள்ளவும்.
  7. இப்போது சமையல் சோடா அல்லது ஈனோ பழ உப்பு சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்க.
  8. குழிப்பணியார பாத்திரத்தை சூடுபடுத்தி ஒரு கரண்டி மாவை சேர்க்கவும்.
  9. ஒரு பக்கம் பழுப்பாகும் வரைக் காத்திருந்து அடுத்த பக்கத்தை வேகவைக்கத் திருப்பிப்போடவும்.
  10. இரண்டு பக்கங்களும் நன்றாக வெந்ததும், எந்த சட்டினியுடனாவது பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்