வீடு / சமையல் குறிப்பு / பிரண்டை ஊறுகாய்

Photo of Pirandai Oorugai/ Adamant creeper pickle by Kalpana V Sareesh at BetterButter
6208
52
4.3(0)
0

பிரண்டை ஊறுகாய்

Nov-23-2015
Kalpana V Sareesh
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரண்டை - 1 கப் (சுத்தப்படுத்தப்பட்டது)
  2. சிவப்பு மிளகாய் - 10 எண்ணிக்கை அல்லது காரத் தேவைக்கு ஏற்றவாறு
  3. புளி - பெரிய நெல்லிக்காய் அளவு அல்லது 1 தேக்கரண்டி புளி சாந்து
  4. நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
  5. கடுகு - 1 தேக்கரண்டி
  6. வெந்தயம் - 1 தேக்கரண்டி
  7. பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
  8. உப்பு - 3/4 தேக்கரண்டி அல்லது தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பிஞ்சுப் பிரண்டைகளைத் தேர்வு செய்து இலைகளை நீக்கி நன்றாகக் கழுவிக்கொள்க. பிரண்டையின் பக்கத்தைச் சீவி/ நாரை நீக்கவும், ஒரு சிறிய கத்தியைப் பயன்படுத்தி நீக்கவும். சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும், பயன்படுத்துவதற்கு இப்போது தயார்.
  2. அரை தேக்கரண்டி எண்ணெயை ஒரு கடாயில் விட்டு சூடுபடுத்திக்கொள்ளவும், பிரண்டை, சிவப்பு மிளகாய், புளி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்க, பிறகு ஆறுவதற்கு எடுத்து வைத்துக்கொள்க.
  3. வெந்தயத்தையும் கடுகையும் எண்ணெய் விடாமல் வறுத்து ஆறவைத்து அம்மி குழவியில் கரடுமுரடாக உடைத்துக்கொள்ளவும்.
  4. பிரண்டை, சிவப்பு மிளகாய், புளியை ( புளி சாறு பயன்படுத்தில் இப்போது சேர்த்துக்கொள்ளவும்) கரடுமுரடான சாந்தாக அல்லது உங்களிடம் அம்மிக்கல் இருந்தால் கரடுமுரடானச் சாந்தாக அரைத்துககொள்ளலாம்.
  5. ஒரு கடாயில் எண்ணெயை சூடுபடுத்தி, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்துகொள்ளவும், குறைவான தீயில் தோராயமாக 8 நிமிடங்களக்கு வதக்கிக்கொள்ளவும். அருமையான கலவைக் கொடுக்க, வெந்தயம் கடுகுத் தூள் சேர்த்துக்கொள்ளவும்.
  6. குறைவான தீயில் மேலும் 4 நிமிடங்கள் சமைத்து எடுத்து ஆறவைத்து காற்றுப்புகாதப் பாத்திரத்தில் சேமிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்