பிரண்டை ஊறுகாய் | Pirandai Oorugai/ Adamant creeper pickle in Tamil

எழுதியவர் Kalpana V Sareesh  |  23rd Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Pirandai Oorugai/ Adamant creeper pickle recipe in Tamil,பிரண்டை ஊறுகாய், Kalpana V Sareesh
பிரண்டை ஊறுகாய்Kalpana V Sareesh
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

330

0

பிரண்டை ஊறுகாய் recipe

பிரண்டை ஊறுகாய் தேவையான பொருட்கள் ( Ingredients to make Pirandai Oorugai/ Adamant creeper pickle in Tamil )

 • பிரண்டை - 1 கப் (சுத்தப்படுத்தப்பட்டது)
 • சிவப்பு மிளகாய் - 10 எண்ணிக்கை அல்லது காரத் தேவைக்கு ஏற்றவாறு
 • புளி - பெரிய நெல்லிக்காய் அளவு அல்லது 1 தேக்கரண்டி புளி சாந்து
 • நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
 • கடுகு - 1 தேக்கரண்டி
 • வெந்தயம் - 1 தேக்கரண்டி
 • பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
 • உப்பு - 3/4 தேக்கரண்டி அல்லது தேவையான அளவு

பிரண்டை ஊறுகாய் செய்வது எப்படி | How to make Pirandai Oorugai/ Adamant creeper pickle in Tamil

 1. பிஞ்சுப் பிரண்டைகளைத் தேர்வு செய்து இலைகளை நீக்கி நன்றாகக் கழுவிக்கொள்க. பிரண்டையின் பக்கத்தைச் சீவி/ நாரை நீக்கவும், ஒரு சிறிய கத்தியைப் பயன்படுத்தி நீக்கவும். சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும், பயன்படுத்துவதற்கு இப்போது தயார்.
 2. அரை தேக்கரண்டி எண்ணெயை ஒரு கடாயில் விட்டு சூடுபடுத்திக்கொள்ளவும், பிரண்டை, சிவப்பு மிளகாய், புளி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்க, பிறகு ஆறுவதற்கு எடுத்து வைத்துக்கொள்க.
 3. வெந்தயத்தையும் கடுகையும் எண்ணெய் விடாமல் வறுத்து ஆறவைத்து அம்மி குழவியில் கரடுமுரடாக உடைத்துக்கொள்ளவும்.
 4. பிரண்டை, சிவப்பு மிளகாய், புளியை ( புளி சாறு பயன்படுத்தில் இப்போது சேர்த்துக்கொள்ளவும்) கரடுமுரடான சாந்தாக அல்லது உங்களிடம் அம்மிக்கல் இருந்தால் கரடுமுரடானச் சாந்தாக அரைத்துககொள்ளலாம்.
 5. ஒரு கடாயில் எண்ணெயை சூடுபடுத்தி, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்துகொள்ளவும், குறைவான தீயில் தோராயமாக 8 நிமிடங்களக்கு வதக்கிக்கொள்ளவும். அருமையான கலவைக் கொடுக்க, வெந்தயம் கடுகுத் தூள் சேர்த்துக்கொள்ளவும்.
 6. குறைவான தீயில் மேலும் 4 நிமிடங்கள் சமைத்து எடுத்து ஆறவைத்து காற்றுப்புகாதப் பாத்திரத்தில் சேமிக்கவும்.

எனது டிப்:

குளிர்பதனப் பெட்டியில் 20 நாட்களுக்கு நன்றாக இருக்கும். சுத்தப்படுத்தும்போது அரிக்கலாம், ஆனால் கிச்சன் கையுறையைப் பயன்படுத்திச் சுத்தப்படுத்துவது சிறந்தது.

Reviews for Pirandai Oorugai/ Adamant creeper pickle in tamil (0)