வீடு / சமையல் குறிப்பு / சர்க்கரைப் பொங்கல்

Photo of Sweet Pongal by Krithika Chandrasekaran at BetterButter
1242
7
0.0(0)
0

சர்க்கரைப் பொங்கல்

Nov-23-2015
Krithika Chandrasekaran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி - 1 கப்
  2. உடைத்த பாசிப்பயிர் - 1/4 கப்
  3. பால் - 2 கப்
  4. தண்ணீர் - 3 கப் +1/4 கப்
  5. வெல்லம் - 2 கப்
  6. பச்சை ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி
  7. வெண்ணெய் (நெய்) - 1/4 கப்
  8. ஜாதிக்கய் தூள் - 1/4 தேக்கரண்டி
  9. கிராம்பு தூள் - ஒரு சிட்டிகை (விருப்பம் சார்ந்தது)
  10. முந்திரி பருப்பு உலர்ந்த திராட்சை - கொஞ்சம்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் பாசிப்பயிரைச் சற்றே வறுத்துக்கொள்ளவும். வாசனை வெளியேறும்வரை. இந்தப் பருப்பை அரிசியுடன் சேர்த்து இரண்டையும் ஒன்றாகக் கழுவிக்கொள்ளவும். பிரஷர் குக்கரில் 3 கப் தண்ணீரையும் பாலையும் சேர்த்து, நன்றாக வெந்து மிருதுவாகும்வரை வேகவைக்கவும். (எளிதாக மசிக்கப்படக்கூடியதாக இருக்கவேண்டும்.)
  2. வெல்லம் 1/4 கப் தண்ணீரை ஒரு கடாயில் சேர்க்கவும். அவ்வப்போது கலந்து கொதி நிலைக்குக்கொண்டுவரவும், எல்லாத் தண்ணீரும் ஆவியாகி உண்மையாகவே ஒட்டும்பதத்தில் பாகு பெறும்வரை கொதிக்கவிடவும்.
  3. அரிசி பருப்புக் கலவையை குக்கரில் இருந்து எடுத்து சூடாக இருக்கும்போதே மசித்துக்கொள்ளவும். மசித்த அரிசியை ஒரு சமயத்தில் கொஞ்சம் என்ற வீதத்தில் பாகில் சேர்க்கவும். இந்தப் பொருள்கள் நன்றாகக் கலக்கும்படி நன்றாக கலக்கவும். நெய் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
  4. இன்னொரு கடாயில், 1 தேக்கரண்டி நெய் சேர்த்து முந்திரி பருப்பு பொன்னிறமாகும்வரை வறுக்கவும். இந்த முந்திரி பருப்புகள் அனைத்தையும் அரிசியுடன் சேர்த்துக்கொள்ளவும்.
  5. ஏலக்காய்த் தூள், ஜாதிக்காய் தூள், கிராம்புத் தூள் ஆகியவற்றை மேலே தூவி நன்றாகக் கலக்கிக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்