வெஜ் தம் பிரியாணி | Veg Dum Biryani in Tamil

எழுதியவர் sapana behl  |  24th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Veg Dum Biryani by sapana behl at BetterButter
வெஜ் தம் பிரியாணிsapana behl
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  40

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  8

  மக்கள்

5584

0

வெஜ் தம் பிரியாணி recipe

வெஜ் தம் பிரியாணி தேவையான பொருட்கள் ( Ingredients to make Veg Dum Biryani in Tamil )

 • பிரியாணி மசாலாவுக்கு - 1 தேக்கரண்டி ஜாதிக்காய்த்தூள்
 • 3-4 நட்சத்திர சோம்புத் துண்டுகள் மற்றும் இலவங்கப்பட்டைக் குச்சிகள்
 • 1 தேக்கரண்டி ஏலக்காய், கிராம்பு மற்றும் மிளகு
 • சாதத்திற்கு - 2 கப் பாஸ்மதி அரிசி
 • 2 பிரிஞ்சி இலை மற்றும் 2 தேக்கரண்டி எண்ணெய்
 • 1 தேக்கரணடி எலுமிச்சை சாறு மற்றும் உப்பு
 • காய்கறிகளுக்கு - பச்சை மற்றும் சிவப்பு மணி மிளகு பொடிசெய்யப்பட்டது ஒன்று
 • 1 கப் காளிபிளவர் மற்றும் 1/4 கப் புரோகோலி
 • 1/2 கப் பட்டாணி மற்றும் கேரட் நறுக்கப்பட்டது
 • 1 தக்காளி நறுக்கப்பட்டது மற்றும் 1 வெங்காயம் நறுக்கப்பட்டது
 • 4 பச்சை மிளகாய் நறுக்கப்பட்டது
 • 2 தேக்கரண்டி பிரியாணி மசாலா இஞ்சி விழுதும் பூண்டு விழுதும்
 • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் சிவப்பு மிளகாய்த் தூள்
 • வறுப்பதற்கு: 1/2 கப் பன்னீரும் உருளைக்கிழங்கும் கனசதுரமாக நறுக்கப்பட்டது
 • 1 வெங்காயம் மெலிதாக நறுக்கப்பட்டது
 • 1/4 கப் முந்திரி பருப்புகளும் 2 தேக்கரண்டி உலர் திராட்சைகளும்
 • மற்றப் பொருள்கள்: 1/4 கப் கொத்துமல்லி நறுக்கப்பட்டது
 • 2 தேக்கரண்டி புதினா நறுக்கப்பட்டது மற்றும் நெய்
 • கொஞ்சம் குங்குமப்பூத் தாள்கள் சூடான பாலில் ஊறவைக்கப்பட்டது
 • 1/4 கப் பால் கிரீம்
 • 2 தேக்கரண்டி பிரியாணி மசாலா
 • தேவையான அளவு எண்ணெய்

வெஜ் தம் பிரியாணி செய்வது எப்படி | How to make Veg Dum Biryani in Tamil

 1. ஒரு கடாயில் 2 கப் தண்ணீரில் அரிசியைக் கழுவி ஊறவைக்கவும். இன்னொரு கப் தண்ணீர், எண்ணெய், எலுமிச்சை சாறு, உப்பு, பிரிஞ்சி இலை ஆகியவற்றைச் சேர்க்கவும். 10 நிமிடங்களுக்கு அல்லது அரிசி அரைவேக்காடு வேகவைக்க மூடியிட்டு வேகவைக்கவும்.
 2. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி, வெங்காயம், பூண்டு விழுது இஞ்சி விழுது சேர்த்து 5-7 நிமிடங்கள் வதக்கவும். அனைத்து காய்கறிகளையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். உப்பு தெளித்து, பிரியாணி மசாலா, சிவப்பு மிளகாய், மஞ்சள் தூள் சேர்க்கவும். மூடியிட்டு நன்றாக வேகவைக்கவும்.
 3. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி வறுப்பதற்குக் கீழ் உள்ள அனைத்துப் பொருள்களையும் ஒன்றன்பின் ஒன்றாக வறுக்கவும். காகிதத் துண்டியில் வடிக்கட்டவும்.
 4. ஒரு கலவை பாத்திரத்தில் வறுத்தப் பொருள்களையும், நறுக்கப்பட்டக் கொத்துமல்லி புதினா இலைகளையும் சேர்க்கவும். குங்குமப்பூ பால், பால் கிரீம், உருக்கிய நெய், பிரியாணி மசாலாவைச் சேர்க்கவும். அனைத்தையும் ஒன்றறக் கலக்கும்வரை கலந்துகொள்ளவும். (கலவை)
 5. ஒரு பெரிய கனமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் வேகவைத்த காய்கறிகளை கொஞ்சம் தண்ணீரோடு மேலே சேர்த்து பரவச் செய்யவும். அரைவேக்காட்டு அரிசியை அதன் மீது வைக்கவும். கொஞ்சம் கலவையைத் தெளித்துக்கொள்ளவும். காய்கறிகள், அரிசி மற்றும் கலவை எல்லாவற்றையும் பயன்படுத்தும்வரை பரவச் செய்வதைத் தொடரவும்.
 6. அலுமினியத் தாளினால் மூடி அதன்பின் மூடியிட்டு மூடவும். சிம்மில் (தம்மில்) கிட்டத்தட்ட 20-25 நிமிடங்கள் வேகவைக்கவும். வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி சட்னி அல்லது ரைத்தாவோடு சூடாகப் பரிமாறவும்.

Reviews for Veg Dum Biryani in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.