சட்டு பரோட்டா | Sattu Paratha in Tamil

எழுதியவர் sapana behl  |  24th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Sattu Paratha by sapana behl at BetterButter
சட்டு பரோட்டாsapana behl
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

2371

0

சட்டு பரோட்டா recipe

சட்டு பரோட்டா தேவையான பொருட்கள் ( Ingredients to make Sattu Paratha in Tamil )

  • 1 கப் கோதுமை மாவு
  • 1/2 கப் சாட்டு (வறுத்த கடலை மாவு)
  • 1 வெங்காயம் நறுக்கியது
  • 1/4 கப் கொத்துமல்லி இலைகள் நறுக்கியது
  • 2 தேக்கரண்டி இஞ்சித் துருவல்
  • 2 பச்சை மிளகாய் நறுக்கியது
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  • 1/2 தேக்கரண்டி மாங்காய்த் தூள் (உலர் மாங்காய் தூள்)
  • 1 தேக்கரண்டி சீரகத் தூள்
  • 1/2 தேக்கரண்டி ஓமம்
  • சுவைக்கேற்ற உப்பு
  • பொரிப்பதற்கு எண்ணெய்
  • தேவையான அளவு தண்ணீர்

சட்டு பரோட்டா செய்வது எப்படி | How to make Sattu Paratha in Tamil

  1. சாட்டுத் தூளை அல்லது பொறபொறப்பாக அரைத்தக் கடலைமாவை சாட்டுத் தூள் செய்ய எடுத்துக்கொள்ளவும். சாட்டுவோடு அனைத்துப் பொருள்களையும் ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து எடுத்துவைக்கவும். கோதுமை மாவுடன் தண்ணீர் சேர்த்து மாவைப் பிசைந்துகொள்க.
  2. மாவிலிருந்து ஒரு சிறிய உருண்டை எடுத்து சிறிய சப்பாத்தியாக உருட்டிக்கொள்க. கொஞ்சம் எண்ணெயை மேற்பரப்பில் தடவி சாட்டுக் கலவையை அதன் மீது வைக்கவும். இப்போது சப்பாத்தியின் அனைத்து மூலைகளையும் சாட்டுக் கலவையை உள்ளே இருக்க, சேர்த்து ஒரு வட்டமான வடிவில் செய்துகொள்ளவும்.
  3. மீண்டும் பட்டியை பரோட்டாவின் அளவில் உருட்டி, உருட்டிய பரோட்டாவை பிரீஹீட் செய்த கிரிட்டில் அல்லது தவாவில் வைக்கவும். போதுமான எண்ணெய் சேர்த்து பரோட்டாவின் இரு பக்கங்களையும் வறுக்கவும். திருப்பிப்போட்டு மிதமானச் சூட்டில் இரண்டு பக்கமும் வேகும்வரை வேகவைக்கவும்.
  4. தயிர், உருளைக்கிழங்கு சட்னி அல்லது கத்திரிக்காய் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

Reviews for Sattu Paratha in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.