வீடு / சமையல் குறிப்பு / ஃபாரா - பீகாரின் பாரம்பரிய உணவு

Photo of Farra- The Traditional Dish of Bihar by Megha Agrawal at BetterButter
4788
53
4.6(0)
0

ஃபாரா - பீகாரின் பாரம்பரிய உணவு

Nov-25-2015
Megha Agrawal
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • பீஹார்
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி:- 1கப்
  2. எண்ணெய்:- 1 தேக்கரண்டி
  3. கடலை பருப்பு: 1 கப்
  4. புதிய இஞ்சி: 1 இன்ச் துண்டு
  5. பச்சை மிளகாய்: 5
  6. சீரகம்: 1 தேக்கரண்டி
  7. சுவைக்கேற்ற உப்பு (நான் 1/2தேக்கரண்டி பயன்படுத்தினேன்)
  8. சிவப்பு மிளகாய்த்தூள்: 1 தேக்கரண்டி
  9. பெருங்காயம்: 1/2 தேக்கரண்டி
  10. மஞ்சள்தூள்: 1 தேக்கரண்டி
  11. மாங்காய்த்தூள்: 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அரிசியையும் பருப்பையும் தனித்தனினே கழுவி 2 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
  2. அரிசியைச் சாந்தாக கொஞ்சம் தண்ணீர் விட்டும் அரைத்துக்கொள்ளலாம். (கொலாஜின் முதல் படத்தைப் பார்த்து மாவின் பதத்தைப் பற்றிய அபிப்பிராயத்தைப் பெறவும்.) மாவை எடுத்து வைக்கவும்.
  3. புதிய இஞ்சி, பச்சை மிளகாய், ஊறவைத்த கடலைப்பருப்பு சேர்த்து பொறபொறப்பான சாந்தாக அரைத்துக்கொள்க. மிகக் குறைவாகத் தண்ணீர் சேர்த்து அடர்த்தியான சாந்தாகத் தேவைக்கேற்ப அரைத்துக்கொள்க. (அரைக்கும்போது ஒருசில பருப்புகள் அப்படியே இருப்பதும் நல்லதுதான்).
  4. மசாலாக்களைப் பருப்புச் சாந்தில் கலந்துகொள்க. ஒரு கனமான அடிப்பாகமுள்ள வானலியை எடுத்து அரிசி மாவை அதனுள் சேர்க்கவும். தீயைக் குறைந்துத் தொடர்ந்து கலக்கவும்.
  5. ஆவி வர ஆரம்பிக்கும்போது படத்தில் பார்ப்பதுபோல் மாவு திரண்டிருக்கும். 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்ப்பது ஒட்டாமல் இருக்கும்.
  6. கொஞ்சம் ஆவி வெளியேறட்டும், அதன்பின்னர் கைகளில் எண்ணெய் தடவி மாவைப் பிசையவும், சப்பாத்திக்குச் செய்வதுபோல். பிசைந்துகொள்க. நான்காவது படத்தில் உள்ளதுபோல் மென்மையான மாவாக மாறும்.
  7. மாவை மூடி 2 நிமிடங்கள் விட்டுவைத்து, மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக்கொள்க. 10-11 உருண்டைகள் வரும்.
  8. மேலே கொஞ்சம் எண்ணெய் தடவி, சப்பாத்தி உருட்டைக் கட்டையால் மெலிதான வட்டவடிவ ரொட்டிகளை உருட்டிக்கொள்க. கைகளால் கொடுக்கப்படும் அழுத்தம் மெதுமவாக இருக்கவேண்டும் இல்லையேல் மாவு தரையில் ஒட்டிக்கொள்ளும்.
  9. பூரணத்தை ரொட்டியில் பரப்பி இரண்டு பக்கங்களையும் மடிக்கவும்.
  10. பாராக்கள் அனைத்தையும் நிரப்பியதும், ஸ்டடீமர் தட்டில் எண்ணெய் தடவி அதில் அடுக்கிக்கொள்க. 15 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
  11. விருப்பமான சப்ஜி மற்றும் சட்னியோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்