வீடு / சமையல் குறிப்பு / ராஜஸ்தானி கடலைமாவு வெண்டைகாய்

Photo of Rajasthani Besan Bhindi by Poonam Bachhav at BetterButter
27073
310
4.7(0)
5

ராஜஸ்தானி கடலைமாவு வெண்டைகாய்

Nov-26-2015
Poonam Bachhav
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • தினமும்
 • ராஜஸ்தான்
 • ஸாட்டிங்
 • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. 250 கிராம் வெண்டைக்காய்/ லேடி பிங்கர்/ ஒக்ரா
 2. 1/4 கப் கடலை மாவு/ சிக்பீ மாவு/ பேசன்
 3. 2 நடுத்தர அளவு வெங்காயம், வெட்டப்பட்டது
 4. 1/2 டீக்கரண்டி சீரகம்/ ஜீரா
 5. 1/2 டீக்கரண்டி கரம் மசாலா
 6. 1/4 டீக்கரண்டி மஞ்சள்தூள்
 7. 1 டீக்கரண்டி கொத்தமல்லி தூள்
 8. 1 டீக்கரண்டி சிகப்பு மிளகாய் தூள்
 9. 1/2 டீக்கரண்டி பெருஞ்சீரகம் தூள்/ சோம்புத்தூள்
 10. 1/2 டீக்கரண்டி உலர்ந்த மாங்காய் தூள்/ அம்சூர் தூள்
 11. 1/4 டீக்கரண்டி பெருங்காயம்/ ஹிங்
 12. 3 டீக்கரண்டி நெய்
 13. 1-2 டீக்கரண்டி தண்ணீர் தெளிப்பதற்கு
 14. சுவைக்கேற்ப உப்பு

வழிமுறைகள்

 1. வெண்டைகாயை ஈரமான கிச்சன் துணிக்கொண்டு துடைத்து காயவைத்துக்கொள்ளவும். வெண்டைக்காய் ஈரமாக இருந்தால் அதில் வளவளப்புத் தன்மை ஏற்படும். இப்போது வெண்டைக்காயை அரை நீளமாக வெட்டிக்கொள்ளவும்.
 2. நாண் ஸ்டிக் பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும். அதில் சீரகம் சேர்த்து பொறியவிடவும். பெருங்காயம் மற்றும் வெங்காயம் சேர்த்துகே கொள்ளவும். வெங்காயம் வதங்கியவுடன் வெண்டைக்காய் சேர்த்துக் கொள்ளவும். நன்றாக கலந்து 2-3 நிமிடம் வேகவிடவும்.
 3. தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும். அதனை கலந்துக் கொண்டு 5-7 நிமிடம் வேகட்டும். நடுத்தர தீயில் சிறிது மிருதுவாக வரும் வரை தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
 4. எண்ணெய் பிரிந்தவுடன் கடலை மாவு, சீரகம், கொத்தமல்லி தூள், பெருஞ்சீரகம் தூள், சிகப்பு மிளகாய்த்தூள் மற்றும் உலர்ந்த மாங்காய் தூள் சேர்த்துக்கொள்ளவும். இவை அனைத்தையும் நன்றாக கலந்துக்கொளவும்.
 5. வெண்டைக்காயை நன்கு மூடி 3-4 நிமிடம் குறைந்த வெப்பத்தில் வேகவிட்டவும். 3-4 கழித்து மூடியைத் திறக்கவும், அது ஒட்டாமல் இருக்க கொஞ்சம் தண்ணீரை தெளித்துக் கொள்ளவும். மறுபடியும் ஒருமுறை கிளறிக் கொண்டு 1 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
 6. இப்போது சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்