செட்டிநாடு பன்னீர் குழம்பு | Chettinad Paneer Curry in Tamil

எழுதியவர் Priya Suresh  |  27th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Chettinad Paneer Curry by Priya Suresh at BetterButter
செட்டிநாடு பன்னீர் குழம்புPriya Suresh
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

802

0

செட்டிநாடு பன்னீர் குழம்பு recipe

செட்டிநாடு பன்னீர் குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Chettinad Paneer Curry in Tamil )

  • 1/4கிலோ பன்னீர் (நடுத்தர அளவில் நறுக்கிக்கொள்க)
  • 1 கப் வெங்காயம் (நன்றாக நசுக்கப்பட்டது)
  • 2 எண்ணிக்கை தக்காளி (நறுக்கப்பட்டது)
  • 4 எண்ணிக்கை காய்ந்த மிளகாய் (துண்டாக்கப்பட்டது)
  • 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • சுவைக்கேற்ற உப்பு
  • எண்ணெய்
  • கொஞ்சம் கறிவேப்பிலை

செட்டிநாடு பன்னீர் குழம்பு செய்வது எப்படி | How to make Chettinad Paneer Curry in Tamil

  1. பன்னீர் துண்டுகளை வெந்நீரில் ஊறவைக்கவும். போதுமான எண்ணெயைச் சூடுபடுத்தி பெருஞ்சீரகத்தையும் காய்ந்த மிளகாயை வறுத்து உடனே நசுக்கிய வெங்காயத்தையும் கறிவேப்பிலையையும் சேர்த்து எல்லாவற்றையும் சிறிது நேரம் வறுக்கவும்.
  2. இப்போது நறுக்கப்பட்டத் தக்காளி, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வெங்காயம் பளபளப்பாகும்வரை வதக்கவும்.
  3. மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி எல்லாவற்றையும் கலந்து பாத்திரத்தை மூடி சிம்மில் சிறிது நேரம் வேகவைக்கவும்.
  4. இதற்கிடையில் தண்ணீரில் இருந்து பன்னீரை எடுத்து வடிக்கட்டி, போதுமான எண்ணெயை சூடுபடுத்தி பன்னீர் துண்டுகளை வறுத்து எடுத்து வைத்துக்கொள்க.
  5. இப்போது வறுத்த பன்னீர் துண்டுகளை சிம்மில் உள்ள குழம்பில் சேர்த்து குழம்பு சுண்டும்வரை சூடுபடுத்தவும்.
  6. ரொட்டி அல்லது புலாவோடு சூடாகப் பரிமாறவும்.

Reviews for Chettinad Paneer Curry in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.