வீடு / சமையல் குறிப்பு / மசோர் டெங்கா (டாங்கி மீன் கறி)(அஸ்ஸாமி உணவு)

Photo of Masor Tenga (Tangy Fish Curry)( Assamese Cuisine) by Alka Jena at BetterButter
2571
24
3.7(0)
0

மசோர் டெங்கா (டாங்கி மீன் கறி)(அஸ்ஸாமி உணவு)

Nov-28-2015
Alka Jena
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தினமும்
  • அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு
  • மெயின் டிஷ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 4 மீன் துண்டுகள்-ரோஹு அல்லது கட்லா பரிந்துரைக்கப்படுகிறது
  2. 1 பெரிய நன்றாக நறுக்கிய தக்காளி
  3. 1 சிறிய நறுக்கிய உருளைக்கிழங்கு
  4. 1/2 டீக்கரண்டி ஐந்துப் பொருள் சேர்த்த மசாலா
  5. 1 டீக்கரண்டி மஞ்சள்தூள்
  6. 1 உலர்ந்த சிகப்பு மிளகாய்
  7. 2 கப் சூடான தண்ணீர்
  8. 1 டீக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி இலை
  9. 1 டீக்கரண்டி எலுமிச்சைச் சாறு
  10. சுவைக்கேற்ப உப்பு
  11. 1 தேக்கரண்டி கடுகு எண்ணெய் + நன்றாக வறுப்பதற்கு

வழிமுறைகள்

  1. மீனில் மஞ்சள்தூள் மற்றும் உப்பை சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும்.
  2. ஆழமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி மீனை லேசாக வறுக்கவும். பின் இதனை தனியாக வைத்துக் கொள்ளவும்.
  3. இப்பொழுது, ஒரு தேக்கரண்டி கடுகு எண்ணெய் சூடுசெய்து அது பொங்கியெழும் போது அதில் உலர்ந்த சிகப்பு மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும் அதை தொடர்ந்து ஐந்துப் பொருள் சேர்த்த மசாலா சேர்த்துக் கொள்ளவும்.
  4. காரங்களின் மணம் வெளிவந்ததும் நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கிக்கொள்ளவும், அது லேசாக கொதித்து தக்காளியின் சாறு வெளிப்படும்.
  5. பின்பு வெட்டிய உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும், பின் இதனை மூடி எண்ணெய் பிரியும் அளவிற்கு லேசாக கொதிக்கவிடவும்.
  6. உருளைக்கிழங்கு மென்மையாக ஆனதும் தண்ணீர் மற்றும் மீன் துண்டுகளை சேர்த்து 3-4 நிமிடங்கள் வேகவிடவும், உப்பு சரியாக உள்ளதா என்று பார்த்து நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்துக் கொள்ளவும்.
  7. உங்களுக்கு மேலும் புளிப்பு தன்மை தேவைப்பட்டால் சுவைக்கு ஏற்றாற்போல் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும், இப்போது பரிமாறுவதற்கு மசோர் டெங்கா தயாராகிவிட்டது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்