வீடு / சமையல் குறிப்பு / உடனடி கார்த்திகை அப்பம்

Photo of Instant Karthigai Appam by Sivasakthi Murali at BetterButter
1357
20
0.0(0)
0

உடனடி கார்த்திகை அப்பம்

Nov-28-2015
Sivasakthi Murali
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு - 1/4 கப்
  2. அரிசி மாவு - 1/3 கப்
  3. பொடீ ரவா - 1/2 கப்
  4. வெல்லம் - 3/4 கப்
  5. தண்ணீர் - 1/2 கப்
  6. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
  7. ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை
  8. நெய் - வறுப்பதற்கு
  9. சமையல் சோடா மாவு - 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வெல்லத்தோடு 1/2 கப் தண்ணீர் சேர்த்து அழகாகக் கொதித்து தேன் பதத்திற்கு அடர்த்தியாகும் வரை சூடுபடுதவும். கசடுகளை நீக்க வடிகட்டி வெல்லப்பாகை எடுத்து வைத்துக்கொள்ளவும்
  2. ரவா, கோதுமை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை ஒரு கலவை பாத்திரத்தில் எடுத்து, அடித்துக்கொள்ளவும். இப்போது வெல்லப்பாகைச் சேர்த்து கட்டிகள் ஏதும் இல்லாமல் கலந்துகொள்ளவும். கட்டிகளை நீக்க முட்டை அடிப்பானைப் பயன்படுத்தவும்.
  3. நமது தோவை மாவு பதத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்க்கவும். அதன்பிறகு தேங்காய்த் துருவலையும் ஏலக்காய்ப்பொடியையும் நன்றாகக் கலக்கி எடுத்த வைத்துக்கொள்ளவும்.
  4. ஆப்பம் செய்ய நீங்கள் தயராக இருக்கும்போது சமையல் சோடாவைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  5. நமது தேவை மாவை விட சற்றே கெட்டியான பதத்தில் இருக்கவேண்டும், அதற்கேற்றபடி தண்ணீரை சரிசெய்துகொள்ளவும்.
  6. பணியாரச் சட்டியை சூடுபடுத்தி, 1/2 தேக்கரண்டி நெய்யை பணியாரக் குழி ஒவ்வொன்றிலும் சேர்த்து, ஒரு கரண்டி மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றுக. 3 நிமிடங்கள் வேகவைக்கவும்
  7. அடுத்தப் பக்கத்தைத் திருப்பி 3 நிமிடங்களுக்கு பொன்னிறமாகும் வரை வேக வைக்கவும். கவனமாகப் பணியாரத்தை ஒரு தட்டிற்கு மாற்றி சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்