வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சாதம் - துரிதமான எளிமையான உணவுப்பெட்டிச் சமையல்குறிப்பு

Photo of Coconut Rice -Quick and easy Lunchbox recipe by Sivasakthi Murali at BetterButter
1297
63
4.2(0)
0

தேங்காய் சாதம் - துரிதமான எளிமையான உணவுப்பெட்டிச் சமையல்குறிப்பு

Nov-28-2015
Sivasakthi Murali
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புதிதாகத் துருவப்பட்டத் தேங்காய் - 1 கப்
  2. வேகவைத்த அரிசி (பச்சரிசி வரவேற்கப்படுகிறது ) - 2 கப்
  3. கடுகு 1 தேக்கரண்டி
  4. சீரகம் 1/2 தேக்கரண்டி
  5. உளுத்தம்பருப்பு 2 தேக்கரண்டி
  6. கடலைப்பருப்பு 1/2 தேக்கரண்டி
  7. கரிவேப்பிலை கொஞ்சம்
  8. சிவப்பு மிளகாய் 2
  9. பச்சை மிளகாய் - 1 பிளவு
  10. பெருங்காயம் ஒரு சிட்டிகை
  11. வேர்கடலை - கையளவு
  12. நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
  13. தேவைக்கேற்ப உப்பு

வழிமுறைகள்

  1. பச்சரிசியை ஒவ்வொரு தானியமும் பிரியும்படிக்குச் சமைக்கவும். வேகவைத்த அரிசியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து, ஒரு தட்டில் பரவச்செய்யவும்.
  2. எண்ணெயை ஒரு கடாயில்/வானலியில் சூடுபடுத்தி, கடுகு, சீரகம், (விரும்பினால்) சேர்க்கவும், வெடிக்கும்போது கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  3. பருப்பு சற்றே நிறம் மாறியதும், பச்சை மிளகாய், பெருங்காயம், கரிவேப்பிலை, வேர்கடலை ஆகியவற்றைச் சேர்க்கவும். வேர்கடலை பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
  4. தேங்காய்த் துருவலைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். தேவைப்படும் அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து தீயை நிறுத்தவும்.
  5. சாதத்தை முள் கரண்டி கொண்டு உதிர்த்து, தயாரித்து வைத்துள்ள தேங்காய்க் கலவையில் சேர்க்கவும். சாதத்தை தேங்காயுடன் நன்றாகக் கலக்கவும்.
  6. அப்பளம்/பப்படம் அல்லது உருளைக்கிழங்கு பொறியலோடு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்