ஹைதாபாத் முர்க் தம் பிரியாணி | Hyderabadi Murgh Dum Biryani in Tamil

எழுதியவர் Farrukh Shadab  |  28th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Hyderabadi Murgh Dum Biryani recipe in Tamil,ஹைதாபாத் முர்க் தம் பிரியாணி, Farrukh Shadab
ஹைதாபாத் முர்க் தம் பிரியாணிFarrukh Shadab
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  50

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

1793

0

ஹைதாபாத் முர்க் தம் பிரியாணி recipe

ஹைதாபாத் முர்க் தம் பிரியாணி தேவையான பொருட்கள் ( Ingredients to make Hyderabadi Murgh Dum Biryani in Tamil )

 • 700 கிராம் வெங்காயம் பொடியாக நறுக்கப்பட்டது
 • 1&1/2 கப் எண்ணெய் வெங்காயத்தை வறுப்பதற்கு
 • மேரினேட் செய்வதற்கு:
 • 1 கிலோ சிக்கன் எலும்புடனானது துண்டுகளாக நறுக்கப்பட்டது
 • (சிக்கனை மிகச்சிறிய துண்டுகளாக வெட்டவேண்டாம்)
 • 400 கிராம் கெட்டித் தயிர் நன்றாகக் கடையப்பட்டது
 • 1 தேக்கரண்டி காஷ்மீரத்து சிவப்பு மிளகாய்த் தூள்
 • 3/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • (அதிகம் செய்யவேண்டாம் ஆனால் நிறத்தையும் சுவையையும் கெடுத்துவிடும்)
 • 2 தேக்கரண்டி மல்லித்தூள்
 • 1 1/2 தேக்கரண்டி ஷாசீரா (சீரகம்)
 • 2 தேக்கரண்டி பூண்டு விழுது
 • 2 தேக்கரண்டி இஞ்சி விழுது
 • 2 இலவங்கப்பட்டை 2 இன்ச் அளவு
 • 10 பச்சை ஏலக்காய்
 • 10 கிராம்பு
 • 2 பிரிஞ்சி இலை
 • 1/2 தேக்கரண்டி கரம் மசாலாத் தூள்
 • 1 தேக்கரண்டி புதிதாக பொடியாக்கப்பட்ட கருமிளகுத்தூள்
 • 1/3 கப் கொத்துமல்லி பொடியாக நறுக்கப்பட்டது
 • 1/3 கப் புதிய புதினா இலை பொடியாக நறுக்கப்பட்டது
 • 3-4 பச்சை மிளகாய் இரண்டாகப் பிளக்கப்பட்டது
 • இரண்டு பெரிய எலுமிச்சைப் பழங்களின் சாறு
 • 1 பகுதி பழுப்பு வெங்காயம் நசுக்கப்பட்டது
 • 1/2 (120 மிலி) கப் எண்ணெய் (வறுத்த வெங்காயம் எடுத்து வைத்துக்கொள்ளப்படுகிறது)
 • சுவைக்கேற்ற உப்பு
 • சாதத்திற்கு:
 • 1 கிலோ (5 கப்) நல்ல தரமான பாஸ்மதி பிரியாணி அரிசி
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 1 நட்சத்திர சோம்பு
 • 4 பச்சை ஏலக்காய்
 • 2 பிரிஞ்சி இலை
 • 4-5 கிராம்பு
 • 2 இலவங்கப்பட்டை ஒரு இன்ச்
 • 16 கப் தண்ணீர்
 • உப்பு
 • அடுக்குகள் தயாரிப்பதற்கா:
 • 5 தேக்கரண்டி நெய்
 • 1/2 கப் சூடான பால்
 • 2 போதுமான சிட்டிகை குங்குமப்பூ
 • 1/2 கப் பழுப்பு வெங்காயம்
 • 1/2 கப் கொத்துமல்லி நறுக்கப்பட்டது
 • 1/2 கப் புதினா இலை
 • 1 தேக்கரண்டி ஏலக்காய்த் தூள்
 • சில துளிகள் கேவாரா (பன்னீர்) எஸ்சென்ஸ்
 • ஒரு கப் பிசைந்த மாவு

ஹைதாபாத் முர்க் தம் பிரியாணி செய்வது எப்படி | How to make Hyderabadi Murgh Dum Biryani in Tamil

 1. ஒரு வானலியில் அல்லது கடாயில் ஒரு கப் எண்ணெய் நறுக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்த்து சூடுபடுத்திக்கொள்க. பொன்னிறமாக மொறுமொறுப்பாக மாறும்வரை வறுக்கவும். உறிஞ்சும் பேப்பரில் எடுத்து வடிக்கட்டி, மீதமுள்ள எண்ணெயைப் பின்னர் பயன்படுத்துவதற்கு எடுத்துவைக்கவும். வறுத்த வெங்காயத்தை 2 சமப் பாகங்களாகப் பிரித்து வைத்துக்கொள்ளவும்.
 2. ஒரு பகுதி மேரினேட்டுக்கும் அடுத்ததது அடுக்குகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
 3. மேரினேட் செய்வதற்கு:-
 4. ஒரு பெரிய பாத்திரத்தில் மேரினேட்செய்வதற்குக் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சேர்வைப்பொருள்களை எல்லாம் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். ஒரு மணி நேரத்திற்கு மூடி எடுத்து வைக்கவும். கனமான அடிப்பாகமுள்ள வானலியில் மேரினேட் செய்த சிக்கனை சமமாக அடித்தளத்தில் சமமாக பரப்பி எடுத்து வைக்கவும்.
 5. அரிசி வேகவைப்பதற்கு அடுக்கு தயாரிப்பதற்கும்:
 6. அரிசியைச் சுத்தப்படுத்திக் கழுவி 35-40 நிமிடங்கள் உறவைக்கவும். குங்குமப்பூவை பாலில் ஊறவைத்து எடுத்து வைக்கவும். பச்சை ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டைக் குச்சிகள், பிரிஞ்சி இலை ஆகியவற்றை சற்றே பொடி செய்துகொள்ளவும். பொடி செய்த மசாலாக்களைக் கொண்டு ஒரு பொட்டலம் கட்டிக்கொள்ளவும்.
 7. வானலியின் அடிப்பாகத்தில் 16 கப் தண்ணீரைச் சூடுபடுத்திக்கொள்ளவும். சீரகம், நட்சத்திர சோம்பு, பொட்டலம், போதுமான உப்பு சேர்க்கவும். கொஞ்சமாக உப்பு சேர்க்கவேண்டாம். தண்ணீர் சுவைத்துப்பார்த்தால் போதுமான உப்பு அதில் இருக்கவேண்டும். கொதி நிலைக்குக் கொண்டுவரவும்.
 8. அரிசி 50% வேகும் வரை அரிசியை சேர்த்து வேகவைக்கவும், சாதத்தில் 50% பெரிய கரண்டியைப் பயன்படுத்தி எடுத்து மேரினேட் செய்யப்பட்ட சிக்கன் மீது சமமாக தடவவும்.
 9. 1/2 கப் வெந்நீரை கொதிக்கும் அரிசியிலிருந்து எடுத்து 5 தேக்கரண்டி நெய்யை அந்த தண்ணீரில் சேர்த்து நெய் உருகும்வரை கலக்கவும்.
 10. கொத்துமல்லி, புதினா, பழுப்பு வெங்காயத்தில் பாதி, 1/3 குங்குமப்பூ பால், 1/3 உருக்கிய நெய், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைத் தூவிக்கொள்ளவும்.
 11. மீதமுள்ள பாதி அரிசியை 70 % வேகம்வரை வேகவைக்கவும், 2-3 நிமிடம் ஆகலாம். அரிசி 70 % வெந்ததும் உடனே வடிக்கட்டி மீதமுள்ள சாதத்தை மேல் அடுக்காகச் செய்வதற்குச் சேர்க்கவும்.
 12. பொட்டலத்தை எடுத்து அரிசியில் சுவையைப் பிழிந்து அப்புறப்படுத்திவிடவும்.
 13. மீதமுள்ள கொத்துமல்லி, புதினா, பழுப்பு வெங்காயம், குங்குமப்பூ, பன்னீர் எஸ்சென்ஸ், உருக்கிய நெய்யை தூவவும்.
 14. மூடியிட்டு மூடி மாவால் சீல் செய்யவும். உயர் தீயில் 15-17 நிமிடங்களுக்கு உயர் தீயில் வைக்கவும். இந்த நிலையில், மூடியின் ஓட்டைவழியாக அல்லது மாவின் பக்கங்கள் வழியாக ஆவி வெளியேறுவதை நீங்கள் பார்க்கலாம்.
 15. இதுதான் தக்க சமயம், பிரியாணியைத் தம்மில் வைப்பதற்கு. சூடானத் தவாவை ஹாண்டிக்குக்கீழ் தம்மில் மேலும் 15ல் இருந்து அதிகப்படியான 18 நிமிடங்கள் வைக்கவும்.
 16. 15 நிமிடங்களுக்குப் பிறகு, அடுப்பை நிறுத்திவிட்டு 10 நிமிடங்கள் விட்டுவைக்கவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு, மூடியைத் திறந்து ருசியான சூடான பிரியாணியை உண்டு, உங்களுக்குப் பிடித்தமான ரைத்தாவோடு பரிமாறவும்.

Reviews for Hyderabadi Murgh Dum Biryani in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.