உடனடி ரவா ஊத்தாப்பம் | Instant Sooji Uttapa in Tamil

எழுதியவர் Poonam Bachhav  |  28th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Instant Sooji Uttapa recipe in Tamil,உடனடி ரவா ஊத்தாப்பம், Poonam Bachhav
உடனடி ரவா ஊத்தாப்பம்Poonam Bachhav
 • ஆயத்த நேரம்

  20

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

6580

0

உடனடி ரவா ஊத்தாப்பம் recipe

உடனடி ரவா ஊத்தாப்பம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Instant Sooji Uttapa in Tamil )

 • 1 கப் - ரவை
 • 3 தேக்கரணடி - கடலை மாவு
 • 1/2 கப் - சாதாரண மோர்
 • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
 • 1 பெரிய தக்காளி பொடியாக நறுக்கியது
 • 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
 • 1/4 கப் பொடியாக நறுக்கப்பட்டப் புதிய கொத்துமல்லி
 • சுவைக்கேற்ற உப்பு
 • 2 தேக்கரண்டி எண்ணெய் + பொரிப்பதற்கு

உடனடி ரவா ஊத்தாப்பம் செய்வது எப்படி | How to make Instant Sooji Uttapa in Tamil

 1. ரவையையும் கடலை மாவையும் ஒரு பெரிய கிண்ணத்தில் எடுத்து, மெதுவாக சாதாரண மோரைக் சேர்த்து ஒரு கரண்டியால் மென்மையான மாவாக கலக்கிக்கொள்ளவும்.
 2. இதற்கிடையில் காய்கறிகளைப் பொடியாக நறுக்கி அவற்றில் உப்பைத் தூவவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு, மாவின் பதத்தைச் சரிபார்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.
 3. மிதமானச் சூட்டில் நான் ஸ்டிக் கடாயைச் சூடுபடுத்துக. கொஞ்சம் எண்ணெய் விடவும். தீயைக் குறைந்து ஒரு கரண்டி மாவை ஊற்றி வட்டமாகப் பரப்பவும்.
 4. ஊத்தாப்பத்தின் மீது நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய், கொத்துமல்லி சேர்க்கவும். காய்கறிகளை சமமாகப் பரப்பவும்.
 5. ஒரு கரண்டியால் விளிம்பைச் சுற்றி கொஞ்சம் எண்ணெய் தெளித்து மூடியிட்டு மூடவும். மிதமானச் சூட்டில் மேல் பகுதி வெள்ளையிலிருந்து மாறி அடிப்பகுதி சற்றே பழுப்பாகும் வரை சமைக்கவும்.
 6. 2 நிமிடங்களுக்குப் பிறகு மெதுவாகத் திருப்பிப்போட்டு 1 நிமிடத்திற்கு வேகவைக்கவும்.
 7. தக்காளி கெச்சப் அல்லது உங்களுக்குப் பிடித்தச் சட்னியோடு சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

பரபரப்பாகக் காத்திருக்க முடியாதபோது, நீங்கள் சூடான மோரைப் பயன்படுத்தி மாவு தயாரிக்கலாம், இது ரவை ஊறவைக்கும் நேரத்தினை துரிதப்படுத்தும். மோர் இல்லையெனில், 2-3 தேக்கரண்டி தயிர் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கலாம், மாவைத் தயாரிக்க. மாவில் கட்டிகள் இருக்கக்கூடாது. உப்பும் 1 தேக்கரண்டி எண்ணெயையும் சேர்த்து நன்றாகக் கலந்து 15-20 நிமிடங்கள் எடுத்து வைக்கவும்.

Reviews for Instant Sooji Uttapa in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.