வீடு / சமையல் குறிப்பு / உடனடி ரவா ஊத்தாப்பம்

Photo of Instant Sooji Uttapa by Poonam Bachhav at BetterButter
58638
843
4.5(0)
11

உடனடி ரவா ஊத்தாப்பம்

Nov-28-2015
Poonam Bachhav
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ரோசஸ்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கப் - ரவை
  2. 3 தேக்கரணடி - கடலை மாவு
  3. 1/2 கப் - சாதாரண மோர்
  4. 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  5. 1 பெரிய தக்காளி பொடியாக நறுக்கியது
  6. 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  7. 1/4 கப் பொடியாக நறுக்கப்பட்டப் புதிய கொத்துமல்லி
  8. சுவைக்கேற்ற உப்பு
  9. 2 தேக்கரண்டி எண்ணெய் + பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ரவையையும் கடலை மாவையும் ஒரு பெரிய கிண்ணத்தில் எடுத்து, மெதுவாக சாதாரண மோரைக் சேர்த்து ஒரு கரண்டியால் மென்மையான மாவாக கலக்கிக்கொள்ளவும்.
  2. இதற்கிடையில் காய்கறிகளைப் பொடியாக நறுக்கி அவற்றில் உப்பைத் தூவவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு, மாவின் பதத்தைச் சரிபார்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.
  3. மிதமானச் சூட்டில் நான் ஸ்டிக் கடாயைச் சூடுபடுத்துக. கொஞ்சம் எண்ணெய் விடவும். தீயைக் குறைந்து ஒரு கரண்டி மாவை ஊற்றி வட்டமாகப் பரப்பவும்.
  4. ஊத்தாப்பத்தின் மீது நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய், கொத்துமல்லி சேர்க்கவும். காய்கறிகளை சமமாகப் பரப்பவும்.
  5. ஒரு கரண்டியால் விளிம்பைச் சுற்றி கொஞ்சம் எண்ணெய் தெளித்து மூடியிட்டு மூடவும். மிதமானச் சூட்டில் மேல் பகுதி வெள்ளையிலிருந்து மாறி அடிப்பகுதி சற்றே பழுப்பாகும் வரை சமைக்கவும்.
  6. 2 நிமிடங்களுக்குப் பிறகு மெதுவாகத் திருப்பிப்போட்டு 1 நிமிடத்திற்கு வேகவைக்கவும்.
  7. தக்காளி கெச்சப் அல்லது உங்களுக்குப் பிடித்தச் சட்னியோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்