வீடு / சமையல் குறிப்பு / ஹைதராபாத்தி மராக்

Photo of Hyderabadi Marag by Nusrath Jahan at BetterButter
17464
122
4.0(0)
0

ஹைதராபாத்தி மராக்

Nov-29-2015
Nusrath Jahan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • ஹைதராபாத்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. படி 1:
  2. 300 கிராம் மட்டன் (எலும்புடன்)
  3. 1 வெங்காயம்
  4. 1/2 டீக்கரண்டி ஷஹி சீரகம்
  5. 1 டீக்கரண்டி கருப்பு மிளகு
  6. 1 அங்குலம் இலவங்க பட்டை
  7. 2 பச்சை ஏலக்காய்
  8. 3 கிராம்பு
  9. 1 பிரிஞ்சி இலை
  10. 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  11. 1/4 டீக்கரண்டி மஞ்சள்தூள்
  12. சுவைக்கேற்ப உப்பு
  13. 2 தேக்கரண்டி எண்ணெய்
  14. 1 தேக்கரண்டி நெய்
  15. 1 கப் தண்ணீர்
  16. 2 பச்சை மிளகாய்
  17. படி 2:
  18. 150 கிராம் தயிர்
  19. 1 டீக்கரண்டி கொத்தமல்லித் தூள்
  20. 1 டீக்கரண்டி கரம் மசாலா தூள்
  21. 1/4 கப் கொத்தமல்லி இலை
  22. 1/8 கப் புதினா இலை
  23. 2 கப் தண்ணீர்
  24. வறுத்து மற்றும் அரைப்பதற்கு:
  25. 12 முந்திரி பருப்பு
  26. 2 தேக்கரண்டி உலர்ந்த தேங்காய்

வழிமுறைகள்

  1. ஒரு முஸ்லின் துணியில் முறை 1 கீழ் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து மசாலாப் பொருட்களையும் கட்டிக் கொள்ளவும். இதை ஒரு குக்கரில் போட்டுவிடவும்.
  2. குக்கரை அதிக தீயில் 1 விசிலும் மற்றும் நடுத்தர தீயில் 3 விசிலும் விடவும் அல்லது மட்டன் மென்மையாகும் வரை வேகவிடவும், இறைச்சி எலும்பில் இருந்து விலகி வந்துவிடும்.
  3. குக்கரில் நீராவி வெளிவர அனுமதிக்கவும். முந்திரி மற்றும் தேங்காய் சேர்த்து வறுத்து பின் நன்கு பசைப்போன்று அரைத்துக் கொள்ளவும்.
  4. நீராவி வெளியிடப்பட்டவுடன், முஸ்லின் துணியுடன் இணைக்கப்பட்ட முழு மசாலாக்களையும் நீக்கிவிடவும். வெங்காயத்தை கரண்டியின் பின் புறத்தால் மசித்துக்கொள்ளவும். கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித் தூள், முந்திரி- தேங்காய் விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கிக்கொள்ளவும்.
  5. அதில் தயிர் சேர்த்து குழம்பு கெட்டியாகவும் எண்ணெய் குக்கரின் ஓரங்களிள் பரவும் வரை வதக்கவும்.
  6. தண்ணீர், கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலை சேர்த்து 4-5 நிமிடம் லேசாக கொதிக்கவிடவும். ஷீர்மல் அல்லது ருமாலி ரொட்டியுடன் சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்