கராஹி/காடை பன்னீர் | Karahi/Kadhai Paneer in Tamil

எழுதியவர் Farrukh Shadab  |  30th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Karahi/Kadhai Paneer by Farrukh Shadab at BetterButter
கராஹி/காடை பன்னீர்Farrukh Shadab
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    45

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

6286

0

கராஹி/காடை பன்னீர் recipe

கராஹி/காடை பன்னீர் தேவையான பொருட்கள் ( Ingredients to make Karahi/Kadhai Paneer in Tamil )

  • 250 கிராம் பன்னீர் துண்டுகளாக நறுக்கியது
  • 4 தக்காளி வெளுக்கப்பட்டு தோல் விதை நீக்கப்பட்டு பொடியாக நறுக்கியது
  • 1 தேக்கரண்டி வறுத்தச் சீரகத் தூள்
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 5-6 கருமிளகு
  • 1/2 தேக்கரண்டி காஷ்மீர் சிவப்பு மிளகாய்த் தூள்
  • 1 1/2 தேக்கரண்டி கராஹி மசாலா
  • 1 பெரிய குடமிளகாய் துண்டுகளாக நறுக்கப்பட்டது
  • 1 தேக்கரண்டி கஸ்தூரி வெந்தயம்
  • 1 தேக்கரண்டி சர்க்கரை
  • 1 1/2 தேக்கரண்டி + இஞ்சி ஜூலியன்
  • 2 தேக்கரண்டி கிரீம்
  • 1/2 எலுமிச்சையின் சாறு
  • சுவைக்கேற்ற உப்பு
  • 1 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 1/2 தேக்கரணடி வெண்ணெய்

கராஹி/காடை பன்னீர் செய்வது எப்படி | How to make Karahi/Kadhai Paneer in Tamil

  1. ஒரு கராஹியில்/அகலமான அடிப்பாகமுள்ள கடாயில், எண்ணெய் வெண்ணெயைச் சூடுபடுத்துக. மிளகு, சீரகம் சேர்த்து வெடிக்கச் செய்யவும்.
  2. நறுக்கியத் தக்காளியைச் சேர்த்து உயர் தீயில் 2-3 நிமிடங்கள் வதக்கவும். கரா மசாலா, சீரகத்தூள், சிவப்பு மிளகாய்த் தூள், இஞ்சி ஜூலியன் சேர்க்கவும்.
  3. மசாலாக்கள் நன்றாக வேகும்வரையிலும் எண்ணெய் பிரியும்வரையிலும் வேகவைக்கவும்.
  4. குடமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். குடமிளகாயை அதிகம் வேகவைக்கவேண்டாம், சற்றே கடிக்கும் பதத்தில் இருக்கட்டும்.
  5. கஸ்தூரி வெந்தயம், எலுமிச்சை சாறு, உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். பன்னீர் துண்டுகள், கிரீம், சேர்த்து மெதுவாகக் கலந்து மேலும் ஒரு நிமிடம் வேகவைக்கவும்.
  6. பரிமாறும் தட்டில் எடுத்து முறுமுறுப்பான லாச்சா பராத்தாக்கள், புள்கா, நான் அல்லது புலாவ் என உங்களுக்குப் பிடித்தவற்றோடு சூடாக உண்டு மகிழவும்.

Reviews for Karahi/Kadhai Paneer in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.