குங்குமப்பூ பாதாம் பால் | Kesar Badam Milk in Tamil

எழுதியவர் Farrukh Shadab  |  30th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Kesar Badam Milk recipe in Tamil,குங்குமப்பூ பாதாம் பால், Farrukh Shadab
குங்குமப்பூ பாதாம் பால்Farrukh Shadab
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

2408

0

குங்குமப்பூ பாதாம் பால் recipe

குங்குமப்பூ பாதாம் பால் தேவையான பொருட்கள் ( Ingredients to make Kesar Badam Milk in Tamil )

  • 750 மிலி முழு கொழுப்புள்ள பால்
  • 1/4 கப் பாதாம் ஊறவைத்து, தோல் உரித்து சாந்தாக அரைக்கப்பட்டது
  • ஒரு சிட்டிகை குங்குமப்பூ
  • சுவைக்கேற்ற அளவு சர்க்கரை
  • 1/2 தேக்கரண்டி ஏலக்காய்த் தூள்
  • ரோஸ் எசென்ஸ் சில துளிகள்
  • 1/4 கப் வெந்நீர்
  • பாதாம் பிஸ்தா துண்டுகள் அலங்கரிப்பதற்காக
  • பாதாம் பிஸ்தா துண்டுகள் அலங்கரிப்பதற்காக

குங்குமப்பூ பாதாம் பால் செய்வது எப்படி | How to make Kesar Badam Milk in Tamil

  1. வெந்நீரில் குங்குமப்பூவை ஊறவைத்து 30 நிமிடங்கள் எடுத்து வைக்கவும். ஒரு கனமான அடிப்பாக முள்ள பாத்திரத்தில் பாலை கொதிக்கவிடவும். சிம்மில் 5-7 நிமிடங்கள் வைக்கவும். பாலில் பாதாம் சேர்த்து தொடர்ந்து கலக்கவும், நன்றாகக் கலந்துவிடும் அளவிற்கு.
  2. குங்குமப்பூ தண்ணீரைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பால் 3/4 பாகமாகக் குறையும் வரை சிம்மில் வைக்கவும். இடையிடையே கலக்கவும், தீயாமல் இருக்கவும், அடியில் ஒட்டாமல் இருக்கவும்.
  3. சுவைக்கேற்ற அளவு சர்க்கரை சேர்த்து (இனிப்புக்கேற்றவாறு) ஏலக்காய்த் தூள், ரோஸ் எசென்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மேலும் 3-4 நிமிடங்கள் சிம்மில் வைக்கவும். அடுப்பிலிருந்து எடுத்து முழுமையாக ஆறவிடவும். சில மணி நேரம் குளிரச்செய்யவும்.
  4. பரிமாறும் கிளாசில் ஊற்றி பாதாம் பிஸ்தா குங்குமப்பூ பொடிகளால் அலங்கரித்து சில்லென்று பரிமாறுக.

எனது டிப்:

சில்லென்ற பால் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் சூடாகவும் அருந்தலாம். குறைந்த கொழுப்புள்ளப் பாலையும் விரும்பினால் சேர்க்கலாம். உங்கள் சுவைக்கேற்ப சர்க்கரை சேர்க்கவும். பால் அருந்தும்போது முறுமுறுப்பான பாதாம் சுவையை விரும்புவதால் பாதாமைக் கரடுமுரடாக நான் அரைத்துக்கொள்வேன். உங்கள் விருப்பத்திற்கேற்ப பொடியாகவோ கரடுமுரடாகவோ அரைத்துக்கொள்ளலாம்.

Reviews for Kesar Badam Milk in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.