வீடு / சமையல் குறிப்பு / மலாய் கோஃப்டா

Photo of Malai Kofta by Rashmi Krishna at BetterButter
5959
923
4.5(0)
0

மலாய் கோஃப்டா

Dec-02-2015
Rashmi Krishna
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • உ.பி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பன்னீர் - 150 கிராம் (நான் வீட்டில் தயாரிக்கப்பட்டதைப் பயன்படுத்தினேன்)
  2. தக்காளி - 3 (நறுக்கியது)
  3. முந்திரிபருப்பு - 1/2 கப்
  4. வெள்ளரி விதைகள் - 1/4 கப்
  5. கசகசா - 1 தேக்கரண்டி (விருப்பம் சார்ந்தது)
  6. இஞ்சிப்பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  7. பச்சை ஏலக்காய் - 2
  8. சிவப்பு மிளகாய்த் தூள் 1 தேக்கரண்டி
  9. சுவைக்கேற்ப உப்பு
  10. எண்ணெய் 1 தேக்கரண்டி
  11. தயிர் 1/4 கப்
  12. மைதா 2 தேக்கரண்டி
  13. புதிய கிரீம் 2 தேக்கரண்டி
  14. கரம் மசாலா 1 தேக்கரண்டி
  15. புதிய கொத்துமல்லி அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. தக்காளியை முந்திரி பருப்பு, வெள்ளரி விதைகள், கசகசா, இஞ்சி, பச்சை ஏலக்காய், சிவப்பு மிளகாய்த் தூள், உப்பு, 1 தேக்கரண்டி எண்ணெய் (1 விசில் போதுமானது) சேர்த்து பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்
  2. கலவை ஆறியதும், அதை அரைத்துக்கொள்ளவும். தயிர் சேர்த்து நன்றாகக் கலந்துகொண்டு, பிறகு தனியாக எடுத்து வைத்து விடவும்.
  3. பன்னீரை ஒரு கிண்ணத்தில் மசித்துக்கொள்க. பச்சை ஏலக்காய்த் தூள், உப்பு, மாவு ஆகியவற்றை நன்றாகக் கலந்துகொள்க. சிறிய பகுதியை எடுத்து கோஃப்டாக்களாக வடிவத்தில் செய்து கொள்ளவும்.
  4. ஒரு கடாயில், போதுமான எண்ணெய் சேர்த்து கோஃப்டாக்களை பொரித்துக்கொள்ளவும். கூடுதல் எண்ணெயை வடிவதற்கு அதை ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்துக் கொள்ளவும்.
  5. கலவையை வடிக்கட்டி ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும், அது கொதிநிலைக்கு வந்ததும் கரம் மசாலாவை கிரீமோடு சேர்த்து சேர்த்துககொள்க.
  6. ஒரு பரிமாறும் பாத்திரத்தில் பொரித்த கோஃப்ட்டாக்களை வைத்து பரிமாறுவதற்கு முன்னர் சிறிது க்ரீமை வைத்து அலங்கரிக்கவும் (நான் கொஞ்சம் சாட் மசாலா தூவி அதன்பின்னர் குழம்பை மேலே ஊற்றுவேன்)
  7. இறுதியாக கொஞ்சம் புதிய கொத்துமல்லி இலைகளால் அலங்கரித்துச் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்