பிட்டா பிரெட் | Pita bread in Tamil

எழுதியவர் Sujata Limbu  |  3rd Dec 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Pita bread by Sujata Limbu at BetterButter
பிட்டா பிரெட்Sujata Limbu
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

753

0

பிட்டா பிரெட்

பிட்டா பிரெட் தேவையான பொருட்கள் ( Ingredients to make Pita bread in Tamil )

 • 3 கப் மைதா
 • 7 கிராம் ஈஸ்ட்
 • 1 மற்றும் 1/2 தேக்கரண்டி உப்பு
 • 1/2 கப் வெதுவெதுப்பானத் தண்ணீர்
 • 1 தேக்கரண்டி சர்க்கரை
 • 250 மிலி வெதுவெதுப்பானத் தண்ணீர்

பிட்டா பிரெட் செய்வது எப்படி | How to make Pita bread in Tamil

 1. 1/2 கப் வெதுவெதுப்பானத் தண்ணீரை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி ஈஸ்ட்டை அதில் கரைக்கவும். சர்க்கரை சேர்த்து கலக்கவும். 10-15 நிமிடங்கள் எடுத்து வைக்கவும்.
 2. ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து உப்பையும் மாவையும் அதில் போடவும். ஒரு சிறிய பள்ளத்தை மையத்தில் ஏற்படுத்தி ஈஸ்ட் கலவையை அதில் ஊற்றவும். வெதுவெதுப்பானத் தண்ணீரை ஊற்றி பெரிய கரண்டியால் கலந்துகொள்ளவும்.
 3. இந்த மாவை மாவு தூவி இடத்தில் வைத்து 10-15 நிமிடங்கள் பிசையவும். மாவு மென்மையான எலாஸ்டித் தன்மையில் இருக்கவேண்டும். எண்ணெய் தடவிய கிண்ணம் ஒன்றை எடுத்து மாவைத் தலைகீழாக அதில் வைக்கவும்.
 4. மாவை 3 மணி நேரங்கள் அல்லது இரட்டிப்பு அளவு வரும்வரை வைக்கவும். இதற்குப் பின், மாவை ஒரு கயிறுபோல் உருட்டி 10-12 சிறு துண்டுகளைத் தயாரித்துக்கொள்ளவும் இந்த உருண்டைகளை மாவு தடவிய இடத்தில்வைத்து மூடி ஒரு 10 நிமிடம் விட்டுவைக்கவும்.
 5. ஓவனை 200 டிகிரி செல்சியசக்குப் ப்ரீ ஹீட் செய்துகொள்க. பேக்கிங் ஷீட்டையும் ப்ரீ ஹீட் செய்யவேண்டும் என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ளவும்.
 6. அடுத்து, ஒவ்வொரு மாவு உருண்டையையும் வட்டவடிவில் உருட்டைக்கட்டையால் உருட்டவும். பீட்டா பிரெட் 5-6 இன்ச் விட்டத்தில் 1/4 இன்ச் மொத்தத்தில் ஒவ்வொன்றும் இருக்கவேண்டும்.
 7. ஒவ்வொரு பிரெட்டையும் 4 நிமிடங்கள் அவை உப்பும் வரை பேக் செய்யவும். அதன்பிறகு அதைத் திருப்பிப்போட்டு மேலும் 2 நிமிடங்கள் வேகவைக்கவும். வெந்ததும் பீட்டாவை எடுத்து அதே நடைமுறையை மற்ற பீட்டாக்களுக்கும் பின்பற்றித் தயாரித்துக்கொள்ளவும்.
 8. உப்பிய பகுதியை ஒரு கரண்டியால் சற்றே கீழாக அழுத்தவும். (இந்த பிரெட்களை பின்னர் பயன்படுத்துவதற்கு சேமிக்கப்படும் பைபகளில் வைக்கலாம்).
 9. உங்களுக்கு விருப்பமானக் காய்கறி அல்லது அசைவ மீன் குழம்புடன் சூடாகப் பரிமாறலாம்.

Reviews for Pita bread in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.