வீடு / சமையல் குறிப்பு / கொழுப்புக் குறைவான பீட்ரூட் ஃபலாபெல் வறுவல்

Photo of Low Fat Roasted Beetroot Falafel by Jagruti D at BetterButter
2174
148
4.5(0)
0

கொழுப்புக் குறைவான பீட்ரூட் ஃபலாபெல் வறுவல்

Dec-06-2015
Jagruti D
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
120 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • மிடில் ஈஸ்டர்ன்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 நடுத்தர அளவுள்ள பீட்ரூட் கழுவி தோலுரிக்கப்பட்டு நறுக்கப்பட்டது
  2. 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
  3. 2 கப் வேகவைத்து வடிக்கட்டிய பீன்ஸ் கலவை
  4. 4-5 பச்சை மிளகாய்
  5. 4-5 தேக்கரண்டி புதிய வேர்க்கோசு நறுக்கியது
  6. 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் துண்டுகள்
  7. 1/2 தேக்கரண்டி கருமிளகுத் தூள்
  8. 4-5 பூண்டு பற்கள்
  9. 1 பெரிய சிவப்பு வெங்காயம் நறுக்கியது
  10. 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  11. 2-3 தேக்கரண்டி அரைத்த சீரகம் மற்றும் மல்லி
  12. 1 தேக்கரண்டி தகினி (எள்ளும் எண்ணெயும் சேர்த்து அறைத்தது)
  13. 2 தேக்கரண்டி எள் மற்றும் ஆலி விதைக் கலவைகள்
  14. 2 முழு பிரெட்
  15. 1-2 தேக்கரண்டி கொண்டைக்கடலை மாவு சற்றே வறுத்தது
  16. 4-5 தேக்கரண்டி எண்ணெய்
  17. உப்பும் மிளகும்

வழிமுறைகள்

  1. கேஸ் குறி 6 வரை ஓவனை ப்ரீ ஹீட் செய்யவும். சில்வர் ஃபாயிலை பேக்கிங் டிரேயில் வைத்து பீட்ரூட் துண்டுகளை அடுக்கி ஆலிவ் ஆயிலைத் தெளித்து, உப்பு சேர்க்கவும்.
  2. சில்வர் ஃபாயிலை மடித்து பீட்ரூட்டை ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் பேக் செய்யவும். வெந்ததும் ஆறவிடவும்.
  3. அனைத்து பொருள்களையும் உணவு பிராசசரில் வறுத்த பீட்ரூட்டோடு எண்ணெயைத் தவிர்த்து வைக்கவும்.
  4. பொறபொறப்பானச் சாதைப் பெறும்வரை பிராசஸ் செய்யவும். சுவையைப் பதம் பார்க்கவும்.
  5. கிளிங் பிளிம்மால் மூடி மாவை அரை மணி நேரம் பிரிஜ்ஜில் வைக்கவும். இதற்கிடையில் சால்சா மற்றும் கிரீமைத் தயாரித்துக்கொள்ளவும்.
  6. ஃபால்பெலைத் தயாரிக்கத் தயாரானதும் ஃபால்பெல் மாவை பிரிஜ்ஜில் இருந்து எடுக்கவும். கைகளைப் பயன்படுத்தி சிறு சிறு உருண்டைகளைப் பிடித்து சற்றே அவற்றைத் தட்டிக்கொள்ளவும்.
  7. ஒரு நான் ஸ்டிக் கிரிடிலில் அல்லது வறுவல் பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்திக் கவனமாக சில ஃப்லாபெல்லை வைக்கவும். இரண்டு பக்கங்களும் பொன்னிறமாகும்வரை வேகவைக்கவும்.
  8. சலாத் மற்றும் டிப்புடன் பரிமாறுக.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்