வீடு / சமையல் குறிப்பு / புதினா சட்டினியுடன் பசலிக்கீரை ஊத்தாப்பம்

Photo of Spinach Uttapam with Mint chutney by Mehak Joshi at BetterButter
4462
275
4.6(0)
0

புதினா சட்டினியுடன் பசலிக்கீரை ஊத்தாப்பம்

Dec-09-2015
Mehak Joshi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 8 துண்டு பிரட் (எந்த வகையும்)
  2. ரவை 4 தேக்கரண்டி
  3. ஓட்ஸ் பவுடர் 4 தேக்கரண்டி
  4. அனைத்துக்கும் பயன்படுத்தப்படும் மாவு 1 தேக்கரண்டி
  5. 1 கப் பச்சை பசலிக்கீரை மசியல் (கரடுமுரடாக)
  6. 1 தேக்கரண்டி மிளகு
  7. 1/2 வெங்காயம், மெலிதாக நறுக்கப்பட்டது
  8. 1/2 தக்காளி, நன்றாக நறுக்கப்பட்டது
  9. 1 தேக்கரண்டி நறுக்கப்பட்ட கொத்துமல்லி
  10. புதினா சட்டினிக்கு: 1 சிறிய வெங்காயம்
  11. 1 சிறிய தக்காளி
  12. 1 இன்ச் இஞ்சி
  13. 4 பற்கள் பூண்டு
  14. 2 கப் புதிய புதினா இலைகள்
  15. 2 பச்சை மிளகாய்
  16. 1 தேக்கரண்டி சர்க்கரை
  17. 1 தேக்கரண்டி உலர்ந்த மாங்காய்த்தூள் (விருப்பத்தைப் பொருத்து)
  18. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. புதினா சட்டினிக்கு: அனைத்து சட்டினிச் சேர்வைப்பொருள்களையும் ஒன்றாக கரடுமுரடானச் சாந்தாக அரைத்து, கொஞ்சம் சுவைக்கேற்ற உப்பு சேர்த்து எடுத்து வைத்துக்கொள்க.
  2. ஊத்தாப்பத்திற்கு: ஒரு பெரிய சமையல் கத்தி அல்லது ஒரு டம்ளரினால் பிரெட்டை வட்டமாக வெட்டிக்கொள்ளவும். காய்ந்த பகுதி வெளியே எடுக்கும்படிக்கும் வெட்டிக்கொள்க.
  3. ஓட்ஸ் பவுடரைத் தயாரிப்பதற்கு, ஓட்சை வெறுமனே ஒரு சூடான கடாயில் வறுத்து, ஆறியபிறகு அரைத்துக்கொள்ளவும். காற்றுப்புகாத ஒரு பாத்திரத்தில் வைக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து, ரவா, மாவு, ஓட்ஸ் பவுடர், பசளிக்கீரை மசியல், மிளகு, உப்பு ஆகியவற்றை ஒன்றாக நன்றாகக் கலக்கவும்.
  4. இந்தக் கலவை ஒரு அடர்த்தியானச் சாந்தாகச் செய்துகொள்ளவும். கலவை கெட்டியாக இருந்தால், ஒரு தேக்கரண்டி தண்ணீர் அல்லது தயிர் சேர்த்துக்கொள்க.
  5. கொஞ்சம் எண்ணெயுடன் ஒரு நான் ஸ்டிக் கடாயைச் சூடுபடுத்தவும். குறைவானத் தீயில் வைத்துக்கொள்க.
  6. ஒரு பிரெட் வட்டத் தட்டையில் ஒன்றல்லது இரண்டு தேக்கரண்டி கீரைக்கலவைப் பரவச் செய்யவும். இப்போது கொஞ்சம் வெங்காயம் தக்காளியை அதன் மீது தூவவும். கடாயில் வைக்கவும், பிரெட் பகுதி கீழே இருக்குமாறு.
  7. பிரெட் பொன்னிறமாக மொறுமொறுப்பாக ஆனதும், தோரைத் திருப்பியால் கவனமாகத் திருப்பிப்போட்டு சில நிமிடங்கள் கீரைக் கலவை நன்றாக வேகும்வரை சமைக்கவும்.
  8. ஒட்டாமல் இருக்க கொஞ்சம் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். அதே போல் எல்லா தட்டைகளையும் செய்து கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.
  9. சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்