மூன்றடுக்கு சாண்ட்விச் டோக்லா | Three layered Sandwich Dhokla in Tamil

எழுதியவர் Jagruti D  |  9th Dec 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Three layered Sandwich Dhokla by Jagruti D at BetterButter
மூன்றடுக்கு சாண்ட்விச் டோக்லாJagruti D
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

3141

0

மூன்றடுக்கு சாண்ட்விச் டோக்லா recipe

மூன்றடுக்கு சாண்ட்விச் டோக்லா தேவையான பொருட்கள் ( Ingredients to make Three layered Sandwich Dhokla in Tamil )

 • 2 கப் அரிசி (எந்த வகையும்)
 • 1 கப் உளுந்து
 • சுவைக்கேற்ற உப்பு
 • ஒரு சிட்டிகை பைகார்பனேட் சோடா
 • 1 தேக்கரண்டி எண்ணெய்
 • சிட்ரிக் அமிலமாக இருந்தால் ஒரு சிட்டிகை
 • 1/2 கப் பச்சை கொத்துமல்லியும் புதினா சட்னியும்
 • 1/4 கப் பூண்டு சட்னி + 2 தேக்கரண்டி பொடியாக்கப்பட்ட வெல்லம், நன்றாகக் கலந்துகொள்க
 • கடலைமாவு பூரணம்:-
 • 1/2 கப் வேகவைத்தக் கடலை பருப்பு (உலர்ந்தது)
 • 1 தேக்கரண்டி எண்ணெய்
 • 1 தேக்கரண்டி நசுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி
 • சுவைக்கேற்ற உப்பு
 • 1 தேக்கரண்டி கரம் மசாலா
 • 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
 • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1/2 தேக்கரண்டி கடுகு
 • தாளிப்பு:-
 • 2-3 தேக்கரண்டி எண்ணெய்
 • 1 தேக்கரண்டி கடுகு
 • ஒரு சிட்டிகை பெருங்காயம்
 • 2-3 தேக்கரண்டி புதிய கொத்துமல்லி அலங்கரிப்பதற்கு

மூன்றடுக்கு சாண்ட்விச் டோக்லா செய்வது எப்படி | How to make Three layered Sandwich Dhokla in Tamil

 1. மாவு:- அரிசி பருப்பைத் தனித்தனியே கழுவி 8-10 மணி நேரம் இரவு முழுவதும் ஊறவைக்கவும். அடுத்தநாள் காலை பருப்பையும் அரிசியையும் அரைத்துக்கொள்க (இட்லி மாவைப்போல). இரண்டையும் கலந்து உப்பு சேர்க்கவும். வெப்பமான இடத்தில் நொதிப்பதற்காக மாவை விட்டுவைக்கவும் (என்னுடையதற்கு 24 மணி நேரம் ஆனது)
 2. கடலை மாவு பூரணம்:- ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு சேர்க்கவும். இஞ்சி பூண்டு வெடிக்க ஆரம்பித்ததும், சில நொடிகள் வறுத்து வேகவைத்த பருப்பைச் சேர்க்கவும். மற்ற மசாலாக்களைச் சேர்த்து சில நிமிடங்கள் வேகவைக்கவும். எலுமிச்சை சாறைச் சேர்த்து அடுப்பை நிறுத்துக.
 3. சாண்ட்விச் டோக்லா:- டோக்லாவைத் தயாரிக்கத் தயாரானதும், ஒரு பாத்திரத்தில் எண்ணெய், சிட்ரிக் அமிலம், சோடாவைக் கொஞ்சம் தண்ணீர் கலந்து மாவில் சேர்க்கவும். நன்றாகக் கலந்துகொள்க. மாவு அடர்த்தியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும். ஒரு பெரிய பானையில் தண்ணீரைச் சூடுபடுத்திக்கொள்ளவும்.
 4. மாவை மீண்டும் கலந்து சற்றே எண்ணெய் தடவிய தட்டில் ஊற்றிக்கொள்க. தண்ணீரில் 15-20 நிமிடங்கள் வைத்து வேகவைக்கவும். கத்தியால் குத்திப் பார்க்கவும். சுத்தமாக வந்தால் வெந்திருக்கிறது என்று பொருள். சற்றே ஆறவிடவும்.
 5. மேலும் ஒரு தட்டு டோக்லாவை வேகவைத்துக்கொள்ளவும். அதன்படி இப்போது உங்களிடம் 2 டோக்லா தட்டுகள் இருக்கும். ஆறியதும், கூறான கத்தியால் டோக்லா தட்டுகளுக்கிடையே ஒரு கீறல் போடவும். அதன்படி உங்களிடம் இப்போது 2 அரைவட்டங்கள் (நிலாவைப் போல் இருக்கும்)
 6. பெரிய கரண்டியால் மெதுவாக இரண்டு அரைவட்ட டோக்கலாக்களையும் தூக்கவும். அடுத்த டோக்லா தட்டுக்கும் இப்படியே செய்க. இப்போது உங்களிடம் 4 அரைவட்ட டோக்லாத் வட்டுக்கள் இருக்கும்.
 7. தட்டையானத் தட்டு அல்லது மரப் பலகையை எடுத்து அரைவட்ட டோக்லா ஒன்றை எடுத்து பலகையில் வைக்கவும். மேல் பகுதியைத் தேய்த்து, பச்சை சட்னியைப் பரப்பவும். மெதுவாக இன்னொரு அரைவட்ட டோக்லாவைத் தூக்கி பச்சை சட்னிமீது வைக்கவும்.
 8. உருட்டைக் கட்டையால் மெதுவாக உருட்டி கடலைப்பருப்பு பூரணத்தைப் பரப்பி மூன்றாவது டோக்லா வட்டை எடுத்து கடலைபருப்பு பூரணத்தின் மீது வைக்கவும். மீண்டும் உருட்டைக்கட்டையால் அழுத்தவும்.
 9. இப்போது பூண்டு சட்னியை சமமாகப் பரப்பி கடைசி (நான்காவது) டோக்லா வட்டை பூண்டு சட்னி மீது வைக்கவும். மீண்டும் உருட்டைக்கட்டையால் உருட்டவும் (மெதுவாக), பூரணம் வெளிவராமல் பார்த்துக்கொள்ளவும்.
 10. இப்போது கூரான கத்தியால் டோக்லா அடுக்கை கட்டமாக வெட்டிக்கொள்ளவும். எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு பொரித்ததும் பெருங்காயத்தைச் சேர்த்து தாளிப்பைத் தயாரித்துக்கொள்ளவும்.
 11. டோக்லா துண்டுகள் மீது ஊற்றவும். கொத்துமல்லி தூவி டீயுடன் பரிமாறவும். மகிழவும்!

Reviews for Three layered Sandwich Dhokla in tamil (0)