வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் நக்கெட்டுகள்

Photo of CHICKEN NUGGETS by Farrukh Shadab at BetterButter
18692
392
4.8(0)
1

சிக்கன் நக்கெட்டுகள்

Dec-16-2015
Farrukh Shadab
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் பர்த்டே

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. 500கிராம் எலும்பற்ற சிக்கன், கடிக்கும் அளவில் சிறிய துண்டுகளாக நறுக்கியது.
  2. 1 தேக்கரண்டி பூண்டு தூள்
  3. 1 தேக்கரண்டி பச்சைமிளகாய், நறுக்கியது
  4. 1 தேக்கரண்டி உலர் கற்பூரவள்ளி, பொடி செய்யப்பட்டது
  5. ஒரு நடுத்தர எலுமிச்சையின் சுவையூட்டி
  6. ஒரு பெரிய எலுமிச்சையின் சாறு
  7. 4 தேக்கரண்டி உருக்கிய வெண்ணெய்
  8. சுவைக்கு உப்பும் நசுக்கிய மிளகும்
  9. பொரிப்பதற்கு எண்ணெய்
  10. தடவுவதற்கு:
  11. மைதா தேவையான அளவு
  12. (நான் அரை கப் மாவைப் பயன்படுத்தினேன்)
  13. முட்டை வெள்ளைக் கரு, தேவையான அளவு (6 முட்டை வெள்ளைக் கருவைப் பயன்படுதினேன்)
  14. தேவையான அளவு பிரெட் துண்டுகள்
  15. உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு சாப்பரில் சிக்கன் துண்டுகள், பூண்டத்தூள், பச்சை மிளகாய், கற்பூரவள்ளி, உப்பு, மிளகு ஆகியவற்றை போட்டு அதை 3-4 முறை அல்லது அனைத்தும் நன்றாக கலக்கும் வரை அடித்துக்கொள்ளவும்.சிலது பொறபொறப்பான நறுக்கிய இறைச்சியாக இருக்கலாம். அது நல்லதுதான்.
  2. ஒரு சுத்தமான கிண்ணத்தில் எடுத்து, உருக்கிய வெண்ணெய், எலுமிச்சை சுவையூட்டியையும் எலுமிச்சை சாறையும் சேர்க்கவும்.நன்றாகக் கலநதுகொள்ளவும். தேவைப்பட்டால் சுவையை சரிசெய்துகொள்ளவும். ஒரு கிணணததில் அல்லது தட்டில் மாவைக் கலந்துகொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் முட்டை வெள்ளைக் கருவை அடித்துக்கொள்ளவும்.
  3. பிரட் துண்டுகளை இன்னொரு தட்டில் எடுத்துக்கொள்ளவும். ஒரு சிறிய எலுமிச்சையின் அளவில் சிக்கன் கலவையை எடுத்து அடைபோல் சற்றே தட்டிக்கள்ளவும். வடிவத்தைப் பற்றிக் கவலை வேண்டாம்.
  4. அடையை மாவினால் தடவவும். அடித்த முட்டை வெள்ளைக் கருவில் தொய்த்து அதன் பின் பிரட் துண்டில் தொய்த்தெடுக்கவும். மீண்டும் முட்டை வெள்ளைக் கருவில் பிறகு பிரட் துண்டில் இரண்டாவது முறை தொய்த்து எடுக்கவும். அனைத்துக் கலவைக்கும் இதைப் போலவே செய்யவும்.
  5. வெண்ணொய் தாள் அல்லது குக்கீ ஷீட்டை ஒன்றையொன்று ஒட்டாமல் ஒரு தட்டில் பரப்பி 3-4 மணி நேரம் உறைய வைக்கவும்.
  6. பின்னர் பயன்படுத்த நினைத்தூல் இந்த நிலையில், நக்கட் உறைந்ததும் அனைத்தையும் சேகரித்து சிப் பையில் வைத்து உறைய வைக்கவும்.
  7. 4 மாதங்களுக்கு எளிதாகச் சேமிக்கவும். . கடைசி தொகுப்பும் நன்றாக உறைய்ம் வரை நக்கட்டுகள் பிரிஜ்ஜில் இருக்கும் என்பதால் தொகுப்புகளாகச் செய்யலாம்.
  8. ஒரு கனமானப் பாத்தரத்தில் அல்லது கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தவும். எண்ணொய் சூடானதும் உயர் தீயில் பொன்னிறமாக மொறுமொறுப்பாக வறுக்கவும். நக்கட்டுகளை அறையின் வெப்பத்தில் உருக்கவேண்டாம்.
  9. பிரிஜ்ஜில் இருந்து எடுத்து நேராக வறுக்கவும். உயர் தீயில் வறுக்கவேண்டாம். தீய்ந்துபோய் உள்ளே வேகாமல் இருக்கும். பேனில் அதிகம் சேர்க்கவேண்டாம். தொகுப்புகளாக வறுத்துக்கொள்ளவும்.
  10. ஒரு உறிஞ்சும் பேப்பரில் எடுத்துக்கெள்க. மற்றவற்றுக்கும் இதையே செய்யவும். கெச்சப்புடன் அல்லது உங்களுக்குப் பிடித்த டிப்புடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்