ப்ரூட் கேக் | Fruit Cake in Tamil

எழுதியவர் Sujata Limbu  |  17th Dec 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Fruit Cake by Sujata Limbu at BetterButter
ப்ரூட் கேக்Sujata Limbu
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  2

  மணிநேரம்
 • பரிமாறும் அளவு

  8

  மக்கள்

1271

0

ப்ரூட் கேக் recipe

ப்ரூட் கேக் தேவையான பொருட்கள் ( Ingredients to make Fruit Cake in Tamil )

 • 1 கப் பழக் கலவை, நறுக்கியது (செர்ரி, அன்னாசி, இலந்தைப் பழம்)
 • 1 கப் உலர் திராட்சை
 • 1 1/2 கப் அடர் உலர் திராட்சை
 • 1 1/2 கப் பொன்னிற உலர் திராட்சை
 • 2 தேக்கரண்டி ஆரஞ்சு, எலுமிச்சை தோல், துருவியது
 • 3/4 தேக்கரண்ட பேக்கிங் சோடா
 • 110 கிராம் மைதா
 • 226 கிராம் கூடுதலாக 2 தேக்கரண்டி வெண்ணெய், உப்பிடப்படாதது
 • 340 கிராம் பழுப்பு சர்க்கரை
 • 5 முட்டை
 • 40 கிராம் தானாக உப்பும் மாவு
 • 125 மிலி தண்ணீர்
 • 125 மிலி கூடுதலாக 6 தேக்கரண்டி அடர் ரம்
 • 1/2 தேக்கரண்டி உப்பு

ப்ரூட் கேக் செய்வது எப்படி | How to make Fruit Cake in Tamil

 1. முதலில் பட்டியலிடப்பட்ட 6 பொருள்களை ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்க்கவும்.
 2. அதன்பின்னர் 1/2 கப் ரம்மை ஊற்றி சிம்மில் மிதமானச் சூட்டில் வைக்கவும். தொடர்ந்து கலக்கி, பின்னர் அடுப்பிலிருந்து இறக்கவும்.
 3. அடுத்து, துருவிய ஆரஞ்சு, எலுமிச்சை தோல், பாகு, பேக்கிங் சோடாவைச் சேர்க்கவும். 1 மணி நேரத்திற்கு எடுத்து வைக்கவும். அப்போதுதான் பழங்கள் திரவத்தை முழுமையாக உறிஞ்சும்.
 4. ஓவனை 162 டிகிரி செல்சியசுக்கு ப்ரீ ஹீட் செய்யவும்.
 5. ஒரு 10 இன்ச் விட்டமுள்ள ஸ்பிரிங்ஃபார்ம் பாத்திரத்தில் வெண்ணெய் தடவவும். அடுத்து அடிப்பக்கத்திலும் பக்கவாட்டுப் பகுதிகளிலும் பார்ச்மெண்ட் பேப்பர் வைக்கவும். ஒரு கிண்ணத்தை எடுத்து இரண்டு மாவுகளையும் உப்போடு சேர்த்து சலித்துக்கொள்ளவும்.
 6. ஒரு தனியான பெரிய பாதிரத்தில் வெண்ணெயையும் சர்க்கரையையும் ஒன்றாக அடித்துக்கொள்ளவும். அதன்பின்ன முட்டைகளை ஒரு சமயத்தில் ஒன்றெனச் சேர்த்து மீண்டும் அடித்துக்கொள்ளவும்.
 7. அதன்பின்ன மாவுக் கலவையைச் சேர்த்து கலக்கும்வரை அடித்துக்கொள்ளவும். இப்போது பழக் கலவையில் கலக்கவும்.அதன்பின்னர் மாவை தயாரித்து வைத்துள்ள பாத்திரத்தில் ஊற்றி, ஒரு ஃபாயிலால் மூடவும்.
 8. இதை 2 மணி நேரங்களுக்கு பேக் செய்யவும். அதன்பின்ன வெப்பநிலையை 135 டிகிரிக்குக் குறைத்து, நுழைத்த டெஸ்டர் சுத்தமாக ஆனால் சற்றே ஈரப்பதத்தோடு வரும்வரை பேக் செய்யவும். (இது கிட்டத்தில் 30 நிமிடங்கள் ஆகலாம்)
 9. சமைத்ததும், ஒரு ரேக்கிற்கு மாற்றி ஃபாயிலை நீக்கவும். கேக்கின் மேல் பகுதியை ஒரு ஸ்கியூவரால் குத்தி 6 தேக்கரண்டி ரம்மை கேக்கில் மேலிருந்து மெதுவாகத் தெளிக்கவும்.
 10. முழுமையாக வெந்ததும், பேன்கேக்குகளின் பக்கங்களை வெட்டித் தளர்த்தவும்.
 11. சூடாகப் பரிமாறவும்.

Reviews for Fruit Cake in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.