வீடு / சமையல் குறிப்பு / குரோக்வே மதாம் சாண்ட்விச்

Photo of Croque Madame Sandwich by Deviyani Srivastava at BetterButter
1890
199
4.7(0)
0

குரோக்வே மதாம் சாண்ட்விச்

Dec-17-2015
Deviyani Srivastava
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • ஃபிரெஞ்ச்
  • ரோசஸ்டிங்
  • பேக்கிங்
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. 50 கிராம் வெண்ணெய் (உப்பு சேர்க்கப்படாதது)
  2. 1 தேக்கரண்டி மாவு
  3. 1/2 கப் பால்
  4. 1 பிரிஞ்சி இலை
  5. 1 முட்டை
  6. சுவைக்கேற்ற உப்பு
  7. 1/4 கப் துருவிய பார்மேசான்
  8. 2 துண்டு பிரெட்
  9. 50 கிராம் ஹாம், துண்டு போடப்பட்டது
  10. வெண்ணெயின் எந்த வகையும், துருவியது
  11. பொரிப்பதற்கு எண்ணெய்
  12. பதப்படுத்த புதிய தைம்

வழிமுறைகள்

  1. சாஸ் தயாரிப்பதிலிருந்து துவங்குவோம். ஒரு நான் ஸ்டிக் கடாயை எடுத்து, கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து உருக்கவும். மாவைச் சேர்த்து வறுத்துக்கொள்க, தீய விடவேண்டாம்.
  2. அடர்த்தியானச் சூப்பைப் பெற மெதுவாகப் பாலை சேர்க்கவும், பார்மேசான் வெண்ணெயையும் பிரிஞ்சி இலையையும் சேர்த்து, கொதிக்கவிடவும். அடுப்பை நிறுத்திவிட்டு எடுத்துவைக்கவும்.
  3. பிரெட்டை அடுக்கி ஹாம் துண்டுகளைச் சேர்க்கவும். இப்போது கொஞ்சம் கூடுதலாக வெண்ணெய் (நான் மோர்செலா எடுத்துக்கொண்டேன்) சாசுடன் கலந்து ஹாமில் பரப்பவும். இன்னொரு துண்டு பிரெட்டினால் மூடுக.
  4. உப்பையும் மிளகையும் உங்கள் விருப்பத்திற்கேற்ப சேர்க்கலாம். கடாயைச் சூடுபடுத்தி மீதமுள்ள வெண்ணெயைச் சேர்க்கவும். சாண்ட்விச்சை அதில்வைத்து 2 நிமிடங்கள் சிம்மில் வைத்து, அடுத்த பக்கத்தைத் திருப்பிப்போடவும்.
  5. இரண்டு பக்கங்களும் நன்றாக பொன்னிறமானதும், தவாவிலிருந்து எடுத்து பரிமாறும் தட்டில் வைக்கவும். மீதமுள்ள சாசை அதன் மீது ஊற்றி, பிரிஞ்சி இலையை எடுத்துவிடவும்.
  6. அதே தவாவில், முட்டையை உடைத்து வறுத்துக்கொள்க. இதற்கிடையில் சாண்ட்விச்சை ஓவனில் மேல் பகதியை பொன்னிறமாக்கவும். முட்டையில் உப்பு மிளகு சேர்த்து சுவைக்கூட்டவும்.
  7. பரிமாறுவதற்கு முன், மேலே முட்டையை வைத்து, புதிய தைம் கொண்டு அலங்கரித்துச் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்