சிக்கன் குழம்பு | Chicken curry in Tamil

எழுதியவர் Sujata Limbu  |  17th Dec 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Chicken curry by Sujata Limbu at BetterButter
சிக்கன் குழம்புSujata Limbu
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

2823

0

சிக்கன் குழம்பு recipe

சிக்கன் குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Chicken curry in Tamil )

  • 1/2 கிலோ சிக்கன்
  • 2 நடுத்தர அளவிலான வெங்காயம், பொடியாக நறுக்கப்பட்டது
  • 1 நடுத்தர அளவிலான தக்காளி, பொடியாக நறுக்கப்பட்டது
  • 2 பச்சை மிளகாய், பிளந்தது
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள்
  • 1 தேக்கரண்டி கரம் மசாலாத்தூள்
  • 1 பிரிஞ்சி இலை
  • 3 ஏலக்காய்
  • 6 கிராம்பு
  • 3 இன்சு இலவங்கப்பட்டை
  • கொஞ்சம் மிளகு
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 2 தேக்கரண்டக தயிர்
  • 2-3 நேக்கரண்டி எண்ணெய்
  • சுவைக்கு உப்பு
  • அலங்கரிக்கக் கொஞ்சம் கொத்துமல்லி இலைகள்

சிக்கன் குழம்பு செய்வது எப்படி | How to make Chicken curry in Tamil

  1. சிக்கன துண்டுகளை நன்றாகக் கழுவி தண்ணீரை வடிகட்டவும்
  2. ஒரு கடாயில்/வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்துக, பச்சை மிளகாய் உலர் மசாலாக்களைச் சேர்த்து அருமையான வாசனை வரும்வரை வறுக்கவும்.
  3. அதன் பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து அது பொன்னிறமாகும்வரை வறுக்கவும். அதன்பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேரத்து பச்சை வாடை போகும்வரை வறுக்கவும்.
  4. இப்போது உப்பு, தக்காளி, மஞ்சள்தூள் ஆகிவற்றை ஒன்றாகச் சேர்த்து கலவை உலரும் வரை நன்றாகக் கலக்கவும். ஒரு மூடியால ்தக்காளி மிருதுவாகும்வரை மூடி போட்டு மூடி சிம்மில் வைக்கவும்.
  5. சிக்கன் சேர்த்து அது வெளுக்கும்வரை வறுக்கவும். அதன் பின் சிவப்பு மிளகாய்த்தூள் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வேகவைக்கவும்.
  6. சிக்கன் சற்றே மூழ்கும் அளவிற்கு த் தண்ணீரை ஊற்றவும். அதிக தண்ணீர் ஊற்றவேண்டாம். குழம்பு தண்ணீர் போலாகிவிடும். சிக்கன் பாதி வேகும்வரை மூடியிட்டு மிதமானச்சூட்டில் வேகவைக்கவும்.
  7. கரம் மசாலாவையும் தயிரையும் சேர்க்கவும். நன்றாகக் கலந்து சிக்கன் மிருதுவாகும்வரை வேகவைக்கவும்.
  8. சாதம் , சப்பாத்தி அல்லது பிரியாணியோடு பரிமாறவும்.

Reviews for Chicken curry in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.