வீடு / சமையல் குறிப்பு / ஸ்ட்ராபெரிகளோடு முட்டையில்லாத சாக்லேட் கேச்

Photo of Eggless Chocolate Cake with Strawberries by Bindiya Sharma at BetterButter
2469
311
4.5(0)
0

ஸ்ட்ராபெரிகளோடு முட்டையில்லாத சாக்லேட் கேச்

Dec-21-2015
Bindiya Sharma
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் பர்த்டே
  • பிரிட்டிஷ்
  • பேக்கிங்
  • சில்லிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மைதா - 1 1/2 கப்
  2. உப்பு - 1 கப் (பொடியாக்கப்பட்டது)
  3. கொகோ பவுடர் - 1/2 கப்
  4. உப்பு - 1/4 தேக்கரண்டி
  5. பால் - 1 கப்
  6. பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
  7. பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி
  8. வெனிகர் - 2 தேக்கரண்டி
  9. எண்ணெய் - 1/2 கப்
  10. வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி
  11. உடனடி காபி பவுடர் - 2 தேக்கரண்டி
  12. அடித்த கிரீம் - 2 கப் (1/2 தேக்கரண்டி வெண்ணிலா எசென்சை இதனோடு சேர்க்கலாம்)
  13. ஸ்ட்ராபெரி - 250 கிராம் கழுவி தோல் உரிக்கப்பட்டது

வழிமுறைகள்

  1. ஓவனை 180 செண்டிகிரேடுக்குப் ப்ரீ ஹீட் செய்யவும்.
  2. ஒரு 9 இன்ச் பாத்திரத்தில் எண்ணெய் தடவி மாவு தூவவும்.
  3. மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர், உப்பு, பேக்கிங் சோடா, கொகோ பவுடர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து இருமுறை சலித்து எடுத்து வைக்கவும்.
  4. வெனிகர், காபியை ஒரு கப் பாலில் சேர்த்து 2 நிமிடங்கள் எடுத்துவைத்து அவற்றில் எண்ணெயைச் சேர்க்கவும்.
  5. இப்போது பால் கலவையை சலித்த மாவில் சேர்த்து, மாவு மென்மையாகப் பளபளப்பாக வரும்வரை கலந்துகொள்க.
  6. தயாரித்து வைத்துள்ள பாத்திரத்தில் ஊற்றி 30-40 நிமிடங்கள் அல்லது ஒரு பல் குத்தும் குச்சியை மையத்தில் நுழைத்தால் சுத்தமாக வெளியே வரும்வரை பேக் செய்யவும்.
  7. முழுமையாக ஆறவிடவும்.
  8. குளிர்ந்த பாத்திரத்தில் அடித்த கிரீமை எடுத்து, நிரப்புவதற்காக சில ஸ்ட்ராபெரிக்களைத் துண்டுபோட்டுக்கொள்ளவும்.
  9. ஆறவைத்தக் கேக்கை இரண்டாக நறுக்கி, கிரீமால் ஒரு அடுக்கு செய்துகொள்ளவும். சில நறுக்கிய ஸ்ட்ராபெரிக்களைப் பரவி அடுத்தப் பாதியால் மூடவும். கிரீமை மேல் பக்கத்திலும் பக்கங்களிலும் நன்றாகத் தடவவும்.
  10. குளிரச் செய்து, நறுக்கிய ஸ்ட்ராபெர்ரிக்களை மேலேக் கூடுதலாக வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்