வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் இட்லி மிளகாய் பொடி

Photo of Coconut idli chutney powder by Saranya Manickam at BetterButter
645
12
0.0(0)
0

தேங்காய் இட்லி மிளகாய் பொடி

Sep-30-2017
Saranya Manickam
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் இட்லி மிளகாய் பொடி செய்முறை பற்றி

வீட்டில் எளிமையாக செய்யக்கூடிய சத்தான தேங்காய் பொடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. தேங்காய் 1 1/4 கப்
  2. கடலை பருப்பு 1/4 கப்
  3. உளுந்து 1/4 கப்
  4. காய்ந்த மிளகாய் 8
  5. கடுகு 1 தேக்கரண்டி
  6. புளி நெல்லி அளவு
  7. வெல்லம் 2 தேக்கரண்டி
  8. கருவேப்பிலை ஒரு கொத்து
  9. பெருங்காயம் 1/2 தேக்கரண்டி
  10. உப்பு தேவையானளவு
  11. நெய் 3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. தேங்காய் பொன்னிறமாக எண்ணெய் சேர்க்காமல் வறுத்துக்கொள்ளவும்.
  2. வாணலியில் நெய் சேர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் தனித்தனியாக பொன்னிறமாக குறைந்த சூட்டில் வறுத்துக்கொள்ளவும்.
  3. வறுத்த பொருட்களை கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்
  4. இறுதியாக வெல்லம் மற்றும் தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் அரைக்கவும்
  5. அரைத்த பொருட்களை நன்றாக கலக்கி, காற்றுபோகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.
  6. சூடான சாதத்துடன் அல்லது இட்லி தோசையுடன் சுவைக்க அருமையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்