வெஜ் ஸ்டூ | Veg Stew in Tamil

எழுதியவர் Asiya Omar  |  2nd Oct 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Veg Stew by Asiya Omar at BetterButter
வெஜ் ஸ்டூAsiya Omar
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    7

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

9

0

வெஜ் ஸ்டூ recipe

வெஜ் ஸ்டூ தேவையான பொருட்கள் ( Ingredients to make Veg Stew in Tamil )

  • தேங்காய் 1 (துருவி பால் எடுக்கவும்)
  • கார்ன்ப்லோர் 1 தேக்கரண்டி
  • காரட் - பாதி, பீன்ஸ் - 4 (பொடியாக நறுக்கவும்)
  • பச்சை மிளகாய் கீறியது - 3 அல்லது 4
  • தேங்காய் எண்ணெய்- 1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - 2 இணுக்கு
  • உப்பு - சிறிது.

வெஜ் ஸ்டூ செய்வது எப்படி | How to make Veg Stew in Tamil

  1. முதலில் தேங்காய் துருவி மீடியம் திக்னெஸ் பால் எடுத்து வைக்கவும்.
  2. தேங்காய்ப் பாலுடன் கார்ன்ப்லோர் கலந்து வைக்கவும்.
  3. கேரட், பீன்ஸ் பொடியாக நறுக்கி வைக்கவும்.
  4. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை பொறியவிட்டு, கீறிய பச்சைமிளகாய் வதக்கி அத்துடன் கேரட் பீன்ஸ் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. தேங்காய்ப்பால் சேர்க்கவும். உப்பு சரிபார்க்கவும்.
  6. நுரை கூடி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.
  7. சுவையான வெஜ் ஸ்டூ ரெடி. ஆப்பம் இடியாப்பத்துடன் பரிமாறலாம்.

எனது டிப்:

தேங்காய்ப்பாலுடன் கார்ன் ப்லோர் சேர்ப்பது திக்காக இருப்பதற்கு. கொதிக்க விடக் கூடாது. மணமாக இருக்கும்.

Reviews for Veg Stew in tamil (0)