மார்ஷ்மெலோவுடன் சூடான சாக்லேட் | Hot Chocolate with Marshmallows in Tamil

எழுதியவர் Deviyani Srivastava  |  23rd Dec 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Hot Chocolate with Marshmallows by Deviyani Srivastava at BetterButter
மார்ஷ்மெலோவுடன் சூடான சாக்லேட்Deviyani Srivastava
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    1

    மக்கள்

850

0

மார்ஷ்மெலோவுடன் சூடான சாக்லேட் recipe

மார்ஷ்மெலோவுடன் சூடான சாக்லேட் தேவையான பொருட்கள் ( Ingredients to make Hot Chocolate with Marshmallows in Tamil )

  • சாக்லேட் காம்பவுண்ட் - 40ல் இருந்து 50 கிராம் (3 தேக்கரண்டி தோராயமாக)
  • சர்க்கரை 2 தேக்கரண்டி (விருப்பம் சார்ந்தது)
  • பால் - 1 கப் (200 மிலி)
  • வெண்ணிலா சாறு - 1/4 தேக்கரண்டி (விருப்பம் சார்ந்தது)
  • மார்ஷ்மெலோக்கள் - விருப்பத்திற்கேற்ற எண்ணிக்கையில்.

மார்ஷ்மெலோவுடன் சூடான சாக்லேட் செய்வது எப்படி | How to make Hot Chocolate with Marshmallows in Tamil

  1. சாக்லேட்டைப் பொடிக் கட்டிகளாக நறுக்கிக்கொள்க. எந்தளவிற்குப் பொடியாக நறுக்குகிறீர்களோ அந்தளவிற்கு வேகமாக சாக்லேட் உருகும்.
  2. இவற்றை ஒரு மைக்ரோவேவில் பயன்படுத்தக்கூடிய மக்கில் 30 விநாடிகளுக்கு மைக்ரோவேவ் செய்யவும். கலக்கி மீண்டும் 30 விநாடிகள் மைக்ரோவேவ் செய்யவும்.
  3. கொஞ்சம் பால் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும். மைக்ரோவேவ் செய்யவும். நன்றாகக் கலக்கவும். மீதமுள்ளப் பாலை ச்சேர்த்து ஒரு நிமிடம் கலக்கவும். விருப்பதிற்கேற்ப சர்க்கரைசேர்த்துக் கலந்து குறைந்தது ஒரு நிமிடம் மைக்ரோவேவ் செய்யவும் (கொதிக்கும் என்பதால் கவனம் தேவை)
  4. சேர்ப்பதாக இருந்தால் வெண்ணிலா சாறைச் சேர்க்கவும். இறுதியாகச் சில மார்ஷ்மெலோக்கள், சாக்லேட் மீதங்கள்சேர்த்து உறிஞ்சிக் குடிக்கவும்!
  5. கூடுதல் டாப்பிங்குகள் அல்லது சுவைகளை முயற்சிக்கவும். கடைந்த கிரீம், சாக்லேட் சிரப், இலவங்கப்பட்டை, புதினா போன்றவற்றைக் கொண்டு அலங்கரித்துக்கொள்ளவும்.

எனது டிப்:

ஒரு மக் கிரீமுடன் சூடான சாக்லேட்டுக்கு ஒரு தேக்கரண்டி கடின கிரீம் பயன்படுத்துக. சுவையூட்டப்பட்ட பால்கட்டியை இனிப்பு, அடர்த்தி, கீரீமுள்ள சூடான சாக்லேட்டுக்காகச் சேர்க்கவும்.

Reviews for Hot Chocolate with Marshmallows in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.