வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் சிக்கன் கறி

Photo of Coconut milk chicken curry by Asiya Omar at BetterButter
264
5
0.0(0)
0

தேங்காய் பால் சிக்கன் கறி

Oct-03-2017
Asiya Omar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் சிக்கன் கறி செய்முறை பற்றி

சிக்கன் கறியை தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் பொழுது அதன் மணமும் ருசியும் தனி தான்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிக்கன் ஊற வைக்க:-
  2. சிக்கன் - அரைக்கிலோ
  3. இஞ்சிபூண்டு விழுது -1 தேக்கரண்டி
  4. தயிர்-1 டேபிள்ஸ்பூன்
  5. மஞ்சள் தூள்-கால் தேக்கரண்டி
  6. மிளகாய்த்தூள் - அரைதேக்கரண்டி
  7. உப்பு- தேவைக்கு
  8. மற்ற பொருட்கள் தேவையானவை:-
  9. வெங்காயம் நறுக்கியது -2
  10. தக்காளி - 2
  11. பச்சை மிளகாய் -2
  12. இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 தேக்கரண்டி
  13. கரம் மசாலா -கால் அல்லது அரைதேக்கரண்டி
  14. மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
  15. சீரகத்தூள்- அரைதேக்கரண்டி
  16. கெட்டி தேங்காய்ப்பால் -1 கப்
  17. எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
  18. நறுக்கிய மல்லி, புதினா சிறிது
  19. உப்பு- தேவைக்கு.

வழிமுறைகள்

  1. சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
  2. சிக்கனை மேலே ஊற வைக்கச் சொன்ன பொருட்கள் கொண்டு ஊற வைக்கவும்.
  3. குக்கரில் அல்லது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானவுடன் வெங்காயம் வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.
  4. அத்துடன் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், மல்லி, புதினா சேர்த்து வதக்கவும். சிறிது உப்பு சேர்த்து நன்கு வதங்க விடவும்.
  5. மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து பிரட்டி ஊறிய சிக்கன் சேர்க்கவும்.
  6. ஒரு கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் வைத்து அணைக்கவும்.
  7. ஆவியடங்கியவுடன் திறந்து தேங்காய்ப்பாலைச் சேர்க்கவும்.
  8. கொதிவந்தவுடன் சிறிது நேரம் சிம்மில் வைக்கவும். உப்பு சரிபார்க்கவும்.
  9. அடுப்பை அணைக்கவும். சுவையான தேங்காய்ப்பால் சிக்கன் கறி தயார்.
  10. நெய்ச்சோறு, புலாவ் வகைகளுடனும் டிபனுக்கும் பரிமாற ஏற்றது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்