வீடு / சமையல் குறிப்பு / ஜப்பானியர்களின் முட்டை ரோல்ஸ்

Photo of Japanese Egg Rolls by Jayasakthi Ekambaram at BetterButter
847
3
0.0(0)
0

ஜப்பானியர்களின் முட்டை ரோல்ஸ்

Oct-04-2017
Jayasakthi Ekambaram
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஜப்பானியர்களின் முட்டை ரோல்ஸ் செய்முறை பற்றி

முட்டையும் காய்களும் சேர்த்து அடை போல் செய்து சுருட்டுவது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • ஜப்பானிய
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை- 3
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம்- 1
  3. பொடியாக நறுக்கிய வெங்காய தாள்- 2 தேக்கரண்டி
  4. பொடியாக நறுக்கிய கேரட்-2 தேக்கரண்டி
  5. மிளகு தூள்-1 தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி
  7. உப்பு- அரை தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. மஞ்சள் தூள், உப்பு, முட்டை ஆகியவற்றை நன்றாக அடித்துக் கொள்ளவும்
  2. அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், வெங்காயத் தாள், கேரட் ஆகியவற்றையும் கலந்து கொள்ளவும். சூடான நான் ஸ்டிக் தோசைக் கல்லில் பாதியளவு முட்டை கலவையை ஊற்றவும்.
  3. அது வெந்தவுடன் திருப்ப கூடாது. அதை தோசைக் கல்லின் கீழ் பக்கமாக நகர்த்த வேண்டும்.
  4. கல்லின் மேல் பக்கம் மீதி பாதி முட்டை கலவையை ஊற்ற வேண்டும். அதுவும் வெந்த பிறகு கீழ்ப்பக்கம் உள்ள முட்டையில் ஆரம்பித்து தோசைக்கரண்டியால் இறுக்கமாக சுருட்ட வேண்டும்.
  5. அதை ஒரு தட்டில் எடுத்து வைத்து சிறிது ஆறியவுடன் கத்தியால் துண்டுகள் செய்ய வேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்