Photo of Moringa leaves salna/ soup by Asiya Omar at BetterButter
1551
4
0.0(1)
0

Moringa leaves salna/ soup

Oct-04-2017
Asiya Omar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Moringa leaves salna/ soup செய்முறை பற்றி

முருங்கைக்கீரையில் பொதுவாக கூட்டு பொரியல்செய்வோம், சால்னா எங்க ஊர் ஸ்பெஷல். உடலிற்கு வலிமை தரக் கூடியது. மலச்சிக்கலை போக்கக் கூடியது. வாயுத்தொந்திரவு உள்ளவர்கள் அளவாகச் சாப்பிடவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முருங்கைக்கீரை -2- 4 கப்
  2. வெங்காயம் - 2
  3. பூண்டு 4-6 பற்கள்
  4. சீரகம் - அரைஅல்லது 1 தேக்கரண்டி
  5. மிளகாய் வற்றல் கிள்ளியது 2-4 காரத்திற்கு.
  6. உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
  7. எண்ணெய் -1 தேக்கரண்டி
  8. தேங்காய்ப்பால் 1 கப் அல்லது அரைக்க வறுத்த அரிசி 2 தேக்கரண்டி ,தேங்காய் 4 தேக்கரண்டி சேர்த்து அரைத்தது .
  9. உப்பு - சிறிது.

வழிமுறைகள்

  1. முருங்கையிலையை ஆய்ந்து நன்கு அலசி வைக்கவும்.
  2. ஒரு பாத்த்திரத்தில் எண்னெய் விட்டு சீரகம், உளுத்தம்பருப்பு, வற்றல் தாளித்து நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  3. அத்துடன் கீரை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். அரிசி கழனி ஒரு கப் சேர்த்து வேக விடவும்.
  4. கீரை வெந்ததும் தேங்காய் அரைத்தது அல்லது தேங்காய்ப்பால் சேர்க்கவும். உப்பு சரிபார்க்கவும்.
  5. கொதி வரவும் அடுப்பை அணைக்கவும்.
  6. சுவையான முருங்கைக்கீரை சால்னா தயார்.
  7. சுவையான சத்தான முருங்கைக் கீரைச் சால்னா தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Oct-04-2017
BetterButter Editorial   Oct-04-2017

Hi Asiya, this image appears to be hazy and unclear, kindly delete this image and upload a clear image of this dish at the earliest. To edit the recipe, please go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the recipe. Thanks!

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்