வீடு / சமையல் குறிப்பு / மட்டன் ஸ்டூ

Photo of Mutton Stew by Ayesha Ziana at BetterButter
836
4
0.0(0)
0

மட்டன் ஸ்டூ

Oct-04-2017
Ayesha Ziana
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் ஸ்டூ செய்முறை பற்றி

தேங்காய்ப்பால், காய்கறி கலவையில் வேக வைத்த மட்டன்.

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை கொண்டாட்டம்
  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • பிரெஷர் குக்
  • அக்கம்பனிமென்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் 300 கிராம்
  2. வெங்காயம் 1
  3. பச்சை மிளகாய் 2
  4. இஞ்சி சிறு துண்டு
  5. பூண்டு 4 பல்
  6. ஏலம் 3
  7. கிராம்பு 3
  8. பட்டை 1 துண்டு
  9. உருளை கிழங்கு 1/2
  10. கேரட் 3 சிறியது
  11. பீன்ஸ் 2
  12. தேங்காய் தலை பால் 1/2 கப்
  13. தேங்காய் 2ஆம்+ 3ஆம் பால் 1 3/4 கப்
  14. தேங்காய் பால் பிழிந்த பின் கிடைக்கும் பீரை
  15. உப்பு தேவைக்கு
  16. தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி
  17. கறிவேப்பிலை சிறிது
  18. மல்லித்தழை சிறிது
  19. இஞ்சி பூண்டு விழுது 1/2 தேக்கரண்டி
  20. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. மட்டனுடன் 3/4 கப் 2ஆம்+ 3ஆம் பால், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து குக்கர் இல் 7 விசில் வேக வைத்து , பின் வேறு பாத்திரத்தில் மாற்றவும்.
  2. அதே குக்கர் இல் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கருவேப்பிலை , தட்டிய இஞ்சி, தட்டிய பூண்டு, தட்டிய ஏலம், கிராம்பு, பட்டை சேர்த்து தாளிக்கவும்.
  3. நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய காய்கறி சேர்த்து வதக்கவும்.
  4. வேக வைத்த மட்டன் கலவை, மீதமுள்ள 1 கப் 2ஆம்+ 3ஆம் பால், உப்பு சேர்த்து சிறு தீயில் காய்கறியை நன்றாக வேக வைக்கவும்.
  5. தேங்காய் பீரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து ஊற்றவும்.
  6. ஸ்டூ இறுகியதும் தேங்காய் தலை பால் சேர்த்து, சில நிமிடம் கழிந்து மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்து மூடி வைக்கவும்.
  7. இடியாப்பம், ஆப்பம் போன்ற டிபன் வகைகளுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்