வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் குழம்பு

Photo of Chicken curry by Surya Rajan at BetterButter
669
5
0.0(0)
0

சிக்கன் குழம்பு

Oct-05-2017
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் குழம்பு செய்முறை பற்றி

காரசாரமான தேங்காய் சிக்கன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிக்கன் : ½ கிலோ
  2. நல்லெண்ணெய் : 6 மேஜைக்கரண்டி
  3. உப்பு : தேவையான அளவு
  4. சின்ன வெங்காயம் : 10
  5. தக்காளி : 1
  6. மிளகாய் : 2
  7. இஞ்சி பூண்டு விழுது - 2 மேஜைக்கரண்டி
  8. கரம் மசாலா : 1 மேஜைக்கரண்டி
  9. சோம்பு : ½ மேஜைக்கரண்டி
  10. பிரியாணி இலை : 1
  11. கல்பாசி : சிறிதளவு
  12. பட்டை : சிறிதளவு
  13. கிராம்பு : 2
  14. ஏலக்காய் : 2
  15. மஞ்சள் தூள் : 1 மேஜைக்கரண்டி
  16. தயிர் : 3 மேஜைக்கரண்டி
  17. சீராக தூள் : 1 மேஜைக்கரண்டி
  18. மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி
  19. மல்லி தூள் :1 மேஜைக்கரண்டி
  20. கருவேப்பிலை : சிறிதளவு
  21. கொத்தமல்லி தழை : சிறிதளவு

வழிமுறைகள்

  1. சிக்கன்ஐ சுத்தம் செய்து மஞ்சள் தூள், தயிர் சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்த்து, பட்டை, கிராம்பு , ஏலக்காய் , கல்பாசி , பிரியாணி இலை , சோம்பு சேர்த்து 30 நொடி வதக்கவும்
  3. பின் சின்ன வெங்காயம் , மிளகாய், கருவேப்பிலை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்
  4. தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  5. கரம் மசாலா , மிளகாய் தூள், மல்லி தூள் , மஞ்சள் தூள் , சீரக தூள் , இஞ்சி பூண்டு விழுது, உப்பு  சேர்த்து 3 நிமிடம் வதக்கவும் ( தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும் )
  6. ஊற வைத்த சிக்கன்ஐ (தயிருடன்) சேர்க்கவும்
  7. தேவையான தண்ணீர் ஊற்றி மூடி போட்டு 10 - 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்
  8. அரைத்து வைத்த தேங்காய் விழுது சேர்த்து 3 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும் .
  9. கொத்தமல்லி தழை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்