வீடு / சமையல் குறிப்பு / வெந்தய கீரை அடையும் அவியலும்

Photo of Adai and Avial by Jayasakthi Ekambaram at BetterButter
85
3
0.0(0)
0

வெந்தய கீரை அடையும் அவியலும்

Oct-05-2017
Jayasakthi Ekambaram
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெந்தய கீரை அடையும் அவியலும் செய்முறை பற்றி

பருப்பும் வெந்தய கீரையும் கலந்த அடை. தொட்டுக் கொள்ள அவியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அடைக்கு:
  2. பச்சரிசி- 200 கிராம்
  3. புழுங்கலரிசி- 200 கிராம்
  4. கடலைபருப்பு- 200 கிராம்
  5. துருவிய தேங்காய்-1 கப்
  6. காய்ந்த மிளகாய்- 5
  7. இஞ்சி பூண்டு விழுது- 2 தேக்கரண்டி
  8. சோம்பு தூள்- 1 தேக்கரண்டி
  9. உப்பு தேவையான அளவு
  10. சுத்தம் செய்து கழுவியவெந்தய கீரை -1 கப்
  11. பொடியாக நறுக்கிய வெங்காயம்-1 கப்
  12. அவியலுக்கு:
  13. வாழைக்காய்- 1
  14. கேரட்- 2
  15. முருங்கைக்காய்- 1
  16. தேங்காய்- 1 கப்
  17. பச்சை மிளகாய்- 3
  18. சீரகம்- 1 தேக்கரண்டி
  19. தேங்காய் எண்ணெய்- 3 தேக்கரண்டி
  20. கடுகு- 1 தேக்கரண்டி
  21. கருவேப்பிலை
  22. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி பருப்பை கழுவி 1 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  2. ஊறிய பின் தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் காய்ந்த மிளகாய், தேங்காய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  3. மாவுடன் இஞ்சி பூண்டு விழுது, சோம்பு தூள், வதக்கி ஆற வைத்த வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.
  4. வெந்தய கீரையையும் கலந்து கொள்ளவும்.
  5. அரை மணி நேரம் கழித்து சூடான தோசைக் கல்லில் அடைகள் ஊற்றவும். அவியல் செய்முறை 1 வாணலியில் 2 கப் தண்ணீர் ஊற்றி அது கொதித்ததும் காய்கறிகளை போட்டு குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும் 2 தேங்காயுடன் பச்சை மிளகாய் சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  6. வெந்த காய்கறிகளுடன் அரைத்த தேங்காயை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் கருவேப்பிலை தாளித்து கொட்டவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்