உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் போளி

Photo of Coconut Poli by Priya Tharshini at BetterButter
2
3
0(0)
0

தேங்காய் போளி

Oct-05-2017
Priya Tharshini
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் போளி செய்முறை பற்றி

இது மிகவும் பாரம்பரியமான பண்டிகை நாட்களில் செய்ய கூடிய இனிப்பு வகை.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • పండుగలాగా
  • దక్షిణ భారతీయ
  • దోరగా వేయించటం
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா - 1 கப்
  2. நல்லெண்ணய் - 2 மேசைக்கரண்டி
  3. உப்பு - சிட்டிகை
  4. மஞ்சள் தூள் - 1/4 மேசைக்கரண்டி
  5. துருவின தேங்காய் - 1 கப்
  6. வெல்லம் - 1 கப்
  7. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  8. நெய் - 2 மேசைக்கரண்டி + போளி செய்வதற்கு
  9. தண்ணீர் - தேவையாண அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மஞ்சள் தூள், நல்லெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
  2. பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மிருதுவான சப்பாத்தி பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.
  3. மேல் மாவு தயார். அதை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  4. ஒரு வானலியில் 2 மேசைக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் துருவின தேங்காய் சேர்த்து 2 நிமிடம் வறுத்து கொள்ளவும்.
  5. தேங்காய் நிறம் மாற தேவையில்லை. பின்பு வெல்லம், ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
  6. வெல்லம் நன்கு கரைந்து துருவின தேங்காய் உடன் சேர்ந்து வரும் வரை கலரவும். பூரணம் ரெடீ.
  7. பூரணத்தை நன்கு ஆறவிடவும். பூரணம் , மேல் மாவு இரண்டையும் சம உருண்டைகளாக பிரிக்கவும்.
  8. ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தொட்டு மேல் மாவை சமமாக சிறு வட்டம் போல் தட்டவும்.
  9. அதன் மேல் பூரணம் வைத்து நன்கு முடி கவர் செய்து கொள்ளவும். கையால் எண்ணெய் தொட்டு சமமாக தட்டி சப்பாத்தி போல் செய்யவும்.
  10. தோசை கல்லை சூடாக்கி போளி இரண்டு பக்கமும் வெகுமாறு நெய் போட்டு சுட்டெடுக்கவும்.
  11. அனைத்தையும் இதே போல் செய்யது எடுக்கவும்.
  12. தேங்காய் போளி தயார். சூடாக நெய் உடன் பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்