வீடு / சமையல் குறிப்பு / ஆப்பிள் தேங்காய் லட்டு

Photo of Apple coconut ladoo by Priya Tharshini at BetterButter
792
2
0.0(0)
0

ஆப்பிள் தேங்காய் லட்டு

Oct-08-2017
Priya Tharshini
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஆப்பிள் தேங்காய் லட்டு செய்முறை பற்றி

ஆப்பிள் தேங்காய் லட்டு மிகவும் எளிதான லட்டு வகை. துருவின தேங்காய் , சக்கரை மற்றம் துருவின ஆப்பிள் சேர்த்து செய்ய கூடியது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • சிம்மெரிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. துருவின தேங்காய் - 1 கப்
  2. துருவின ஆப்பிள் - 1 கப்
  3. சக்கரை - 2 கப்
  4. நெய் - 4 மேசைக்கரண்டி
  5. பிஸ்தா - 1 மேசைக்கரண்டி (நறுக்கியது)
  6. ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
  7. தேங்காய் ( உலர்ந்த ) - 2 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் துருவின ஆப்பிள் சேர்த்து வதகவும்.
  2. 2 - 3 நிமிடம் வதக்கியதும் துருவின தேங்காய் சேர்த்து வதகவும்.
  3. ஆப்பிள் மற்றும் தேங்காய் ஒன்று சேர்த்து வரும் வரை கலரவும்.
  4. பின்பு சக்கரை சேர்த்து கலக்கவும். சக்கரை நன்கு கரைந்ததும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
  5. மீதம் உள்ள நெய் சேர்த்து 10 நிமிடம் மிதமான சூட்டில் கிளறவும்
  6. நறுக்கின பிஸ்தா சேர்த்து சூருண்டு வரும் வரை கிளறவும்
  7. அடுப்பை அனைத்து தட்டில் கொட்டி ஆறவிடவும்.
  8. கையில் நெய் தடவி மிதமான சூடு இருக்கும் போது லட்டுகளை பிடிக்கவும்.
  9. உலர்ந்த தேங்காயை தட்டில் கொட்டி பிடித்த லட்டுவை அதில் உருட்டி எடுக்கவும்.
  10. ஆப்பிள் தேங்காய் லட்டு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்