வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் அடைபிரதமன்

Photo of Coconut milk adai pradaman by Krishnasamy Vidya Valli at BetterButter
526
2
0.0(0)
0

தேங்காய் பால் அடைபிரதமன்

Oct-08-2017
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் அடைபிரதமன் செய்முறை பற்றி

கொஞ்சம் செய்வதற்கு நேரம் எடுத்தாலும் பாரம்பரிய பாயாசம் இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • கேரளா
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. தேங்காய் துருவல் - 2 கப்
  2. அரிசி மாவு - 1 கப்
  3. வெல்லம் - 2 கப்
  4. ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
  5. தேங்காய் பல்லுகீறியது - 4 தேக்கரண்டி
  6. தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
  7. வாழை இலை (அடைதட்டுவதற்கு)- 1
  8. நெய் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. தேங்காய் துருவலை தண்ணீர் விட்டு அரைத்து முறையே முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் பால் எடுத்துக்கொள்ளவும்
  2. வெல்லம் தட்டி வைத்துக்கொள்ளவும்
  3. அரிசி மாவை ஒரு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் கொதிக்கும் வெந்நீரை விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்
  4. வாழை இலையை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
  5. வாழையிலையில் எண்ணெய் தடவி சிறுசிறுஅடைகளாக தட்டிக்கொள்ளவும்
  6. கடாயில் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் கொதிக்கும் தண்ணீரில் அப்படியே இலையுடன் அடையை போடவும்.
  7. அடை வெந்ததும் இலையிலிருந்து தானாக தண்ணீரில் வெளியே வந்து விடும். கண்கரண்டி உதவியுடன் அடைகளை எடுத்து தனியாக ஆற வைக்கவும்
  8. மூன்றாவது பாலில் அடையை போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  9. தனியாக கடாயில் சிறிது தண்ணீர் விட்டு வெல்லத்தை போடவும். கொதி வந்தவுடன் வடிகட்டிக்கொள்ளலாம்
  10. மூன்றாவது பாலில் வேக வைத்த அடையை வடிகட்டிய வெல்ல கரைசல் மற்றும் இரண்டாம் பால் விட்டு ஒரு கொதி விடவும்
  11. முதல்பால் சேர்த்து ஏலக்காய் பொடி தூவி அடுப்பை அணைத்து விடவும்
  12. நெய்யில் தேங்காய் பல்கீறியதை சிவக்க வறுத்து சேர்க்கவும்
  13. பாரம்பரிய அடைபிரதமன் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்