மசாலா டீ | Masala Chai in Tamil

எழுதியவர் Deviyani Srivastava  |  24th Dec 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Masala Chai by Deviyani Srivastava at BetterButter
மசாலா டீDeviyani Srivastava
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

1995

0

மசாலா டீ

மசாலா டீ தேவையான பொருட்கள் ( Ingredients to make Masala Chai in Tamil )

 • இஞ்சி 1 தேக்கரண்டி, துருவியது
 • முழு ஏலக்காய் - 7 விதைகள்
 • முழு கிராம்பு - 4
 • இலவங்கப்பட்டை ஒரு சிட்டிகை
 • சர்க்கரை - 2 தேக்கரண்டி
 • 1 கப் பால்
 • 1 கப் தண்ணீர்
 • 3 தேக்கரண்டி வழக்கமான டீ இலைகள்

மசாலா டீ செய்வது எப்படி | How to make Masala Chai in Tamil

 1. கொஞ்சம் இஞ்சியைத் துருவிக்கொள்க, தோராயமாக 1 தேக்கரண்டி அல்லது அதற்குமேல், சுவைக்கேற்றபடி
 2. அடுத்து உங்களுக்கு ஒரு குழவி தேவை, ஏலக்காயை இடித்துப் பிளந்துகொள்க. விதைகளைப் பரப்பி மூடி, விதைகளை குழவியிலேயே விட்டுவைக்கவும்.
 3. 4 கிராம்பை உடைத்து குழவியில் போடவும்.
 4. ஒரு சிறியத் துண்டு இலவங்கப்பட்டையை உடைத்து குழவியில் சேர்க்கவும். அதன் வாசனை தூக்கலாக இருக்கும் என்பதால் சிறிய துண்டாக எடுத்துக்கொள்க.
 5. மசாலாக்களைப பொடியாகக் குழவியில் அரைத்துக்கொள்க.
 6. பாலையும் தண்ணீரையும் 1:1 விகிதத்தில் மீதமானச் சூட்டில் வைக்கவும். புதிதாக அரைத்த மசாலாக்களோடு டீ இலைகள், சர்க்கரை, இறுதியாக துருவிய இஞ்சியைச் சேர்க்கவும்.
 7. தீயை அதிகரித்து, பின் கூட்டிக்குறைக்கவும். 3 முறை செய்வதால் மசாலாக் கலவைகள் வாசனையை வெளியிடத் துவங்கும்.
 8. நேரடியாகக் கப்பில் வடிக்கட்டி சூடாகப் பருகவும்.

எனது டிப்:

விருப்பத்திற்கேற்ப சேர்க்கப்படக்கூடிய கூடுதல் மசாலாக்கள் யாதெனில், கருமிளகு (4 மிளகு), துளசி (6-8 இலைகள்), புதினா (6-8 இலைகள்), பிரிஞ்சி இலை (1/2-1 இலை), ஜாதிக்காய் (ஒரு சிட்டிகை மட்டும்) , பெருஞ்சீரகம் (1/4 தேக்கரண்டி)

Reviews for Masala Chai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.