வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் தம் பிரியாணி

Photo of Chicken dum briyani( simple method) by Asiya Omar at BetterButter
412
6
0.0(0)
0

சிக்கன் தம் பிரியாணி

Oct-10-2017
Asiya Omar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் தம் பிரியாணி செய்முறை பற்றி

வீட்டில் உள்ள பொருட்கள் வைத்து செய்து அசத்தக்கூடிய தம் பிரியாணி.

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை கொண்டாட்டம்
  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. பாசுமதி அரிசி அல்லது சீரக சம்பா அல்லது பிரியாணி அரிசி - 1 கிலோ
  2. சிக்கன் - ஒண்ணேகால் கிலோ
  3. வெங்காயம் - 400 கிராம்
  4. தக்காளி - 400 கிராம்
  5. பச்சை மிளகாய் - 8
  6. எலுமிச்சைப் பழம் -1
  7. மல்லி, புதினா - தலா 2 கையளவு
  8. தயிர் 200 மில்லி
  9. இஞ்சி பூண்டு பேஸ்ட் - குவியலாக 3 தேக்கரண்டி
  10. கரம் மசாலா (ஏலம் பட்டை கிராம்புத்தூள்) - 2 தேக்கரண்டி
  11. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)
  12. ஏலம் 5, கிராம்பு-5, பட்டை -2 துண்டு
  13. மஞ்சள் தூள் சிக்கன் கழுவ அரை டீஸ்பூன்
  14. எண்ணெய் - 150 மில்லி
  15. நெய் - 100 மில்லி
  16. லெமன் எல்லோ அல்லது சாப்ரான் கலருக்கு சிறிது.
  17. உப்பு - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. சிக்கனை சுத்தம் செய்து மஞ்சள் தூள் போட்டு அலசி வைக்கவும்.
  2. அரிசியை அலசி ஊற வைக்கவும். எல்லாபொருட்களும் நறுக்கி வைக்கவும்.
  3. கரம் மசாலா: ஏலம், கிராம்ப, பட்டை 1:1:2 என்ற விகிதத்தில் போட்டு மிக்ஸியில் திரித்து தேவைக்கு இரண்டு ஸ்பூன் பயன்படுத்தலாம். எங்கள் ஊர் பிரியாணிக்கு வாசனைக்கு ஏலம் பட்டை கிராம்ப மட்டுமே உபயோகிப்போம். நீங்கள் விரும்பினால் மற்ற பொருட்கள் சேர்க்கலாம்.
  4. பிரியாணி செய்யும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் நெய் விடவும். வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும். 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு சேர்க்கவும். கரம் மசாலா சேர்க்கவும். சிம்மில் வைத்து மூடி வதங்க விடவும். பொறுமையாக செய்யவும்.
  5. வதங்கியதும் மல்லி, புதினா, தக்காளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதங்க விடவும்.
  6. அடுத்து தக்காளி மசிந்ததும் மிளகாய்த்தூள் சேர்க்கவும். பிரட்டவும். ஊறிய சிக்கன் சேர்த்து பிரட்டி தயிர் சேர்க்கவும். மூடி சிக்கன் வேக விடவும். அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  7. ஒரு பாத்திரத்தில் தேவைக்கு தண்ணீர் கொதிக்க வைத்து ,உப்பு, முழு ஏலம், பட்டை, கிராம்பு, சேர்த்து ஊறிய அரிசியை போட்டு முக்கால் வேக்காடு ஆனதும் வடித்து வைக்கவும்.
  8. சிக்கன் ஓரளவு வெந்து எண்ணெய் மேலே வரும். சிக்கன் மூழ்கி கிரேவி திக்காக இருக்க வேண்டும்.
  9. வடித்த அரிசியை பிரியாணிக்கு தயார் ஆன சிக்கன் கிரேவி மீது சூட்டோடு தட்டவும். லெமன் எல்லோ அல்லது சாப்ரான் கரைசல் தெளிக்கவும். பாதி எலுமிச்சையை பிழிந்து விடவும். விரும்பினால் ஒரு தேக்கரண்டி நெய் மேலே மணத்திற்கு சேர்க்கலாம்.
  10. விரும்பினால் அலுமினியம் பாயில் போட்டு கவர் செய்தும் பின்பு சிக்கென்று மூடியை வைத்து மூடவும். அடியில் பழைய தோசைக் கலத்தை வைக்கவும்.மேலே கனத்திற்கு வடித்த கஞ்சியைக் கூட வைக்கலாம். ஆவி வெளியே வராத படி தம் ஆகும்.
  11. அடுப்பை சிம்மில் கால் மணி நேரம் வைத்து அணைக்கவும்.10 நிமிடம் அப்படியே வைக்கவும்.
  12. திறந்த அகப்பையைக் கொண்டு கீழிருந்து மேலாக சிக்கன் பிய்ந்து விடாதபடி பிரட்டி விடவும். சோறும் உதிரியாக சாப்டாக இருக்கும்.
  13. சுவையான சிக்கன் பிரியாணி தயார். பக்க உணவுகளுடன் பரிமாறி அசத்தவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்