வீடு / சமையல் குறிப்பு / பூண்டு பொடி

Photo of LASUN CHUTNEY by Priya Mani at BetterButter
2345
6
0.0(0)
0

பூண்டு பொடி

Oct-10-2017
Priya Mani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பூண்டு பொடி செய்முறை பற்றி

சுவையான பூண்டு பொடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தோல் உரித்த பூண்டு 12
  2. கொப்பரை தேங்காய் 10 சிறிய துண்டுகள் /துருவிய தேங்காய் 1/2 கப்
  3. வெள்ளை எள்ளு 2 தேக்கரண்டி
  4. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, அதில் தோல் உரித்த பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்
  2. அது நன்கு நிறம் மாறிய உடன் ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்
  3. அதே கடாயில் மீதம் உள்ள எண்ணெய் ஊற்றி கொப்பரை தேங்காய் அல்லது துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்கவும்
  4. அதையும் அந்த தட்டில் கொட்டி கொள்ளவும்
  5. அதே கடாயில் வெள்ளை எள்ளு சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்
  6. மூன்று பொருள்களையும் நன்கு ஆற விடவும்
  7. ஒரு ஈரம் இல்லாத மிக்ஸி ஜாரில் அந்த பொருள்களை சேர்த்து நன்கு கொர கொர வென்று அரைக்கவும்
  8. அரைத்த பொடியை ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும்
  9. அதனுடன் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்
  10. இப்பொழுது சுவையான பூண்டு பொடி தயார்
  11. இது இட்லி, தோசை, உத்தப்பம் சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்