வீடு / சமையல் குறிப்பு / ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (கச்சி)

Photo of Hyderabadi Chicken Dum Birayni (Kachi) by Aameena Ahmed at BetterButter
3846
473
4.9(0)
0

ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (கச்சி)

Dec-25-2015
Aameena Ahmed
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • ஹைதராபாத்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சிக்கன் செய்வதற்கு:
  2. சிக்கன் 1 கிலோ
  3. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  4. பிரவுன் ஆணியன் - 1 கப்
  5. கிராம்பு - 6
  6. பச்சை ஏலக்காய் - 6
  7. இலவங்கம் - 6 சிறிய அளவு
  8. ஷஹி சீரகம் - 1/4 தேக்கரண்டி
  9. தயிர் - 1/2 முதல் 3/4 கப்
  10. கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
  11. சீரகத்தூள்- 3/4 தேக்கரண்டி
  12. சுவைக்கேற்ப உப்பு
  13. சிகப்பு மிளகாய்த்தூள்- 2 தேக்கரண்டி
  14. மஞ்சள்தூள் - 3/4 தேக்கரண்டி
  15. கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
  16. பச்சைக் கொத்தமல்லி - 1/2 தேக்கரண்டி
  17. புதினா இலை - ஒரு சிறு கொத்து
  18. பச்சை மிளகாய் - 8
  19. எலுமிச்சை சாறு - 1 பெரிய எலுமிச்சை
  20. பச்சை மிளகாய் விழுது - 1 முதல் 2 தேக்கரண்டி
  21. (புதிய பச்சை மிளகாயை விழுது போன்று அரைக்கவும்)
  22. எண்ணெய் - 1/2 கப் மற்றும் 4 தேக்கரண்டி
  23. சாதத்திற்கு:
  24. இந்திய கேட் பாஸ்மதி அரிசி கிளாசிக் - 1 கிலோ
  25. கிராம்பு - 6
  26. பச்சை ஏலக்காய் - 6
  27. இலவங்கம் - 6 சிறிய 1 அங்குல துண்டு
  28. ஷஹி சீரகம் - 1 1/2 தேக்கரண்டி
  29. சுவைக்கேற்ப உப்பு
  30. தண்ணீர் தேவைக்கு ஏற்றவாறு:
  31. அலங்கரிக்க:
  32. குங்குமப்பூ பாலில் ஊறவைத்தது - 3 முதல் 4 தேக்கரண்டி
  33. நெய் 2 அல்லது 3 தேக்கரண்டி
  34. சிறிது புதினா இலை
  35. பிரவுன் ஆணியன்- கையளவு
  36. சிறிது கொத்தமல்லி இலை
  37. கேவ்றா நீர் 1 அல்லது 2 தேக்கரண்டி (தேவைப்பட்டால்)

வழிமுறைகள்

  1. ஒரு கிண்ணத்தில் சுத்தமான மற்றும் உலர்த்திய சிக்கனை போட்டுக் கொள்ளவும். எண்ணெய் மற்றும் பிரவுன் ஆணியன் தவிர சிக்கன் செய்வதற்க்கான மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். அதை 1 முதல் 2 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
  2. அரிசியை கழுவி தண்ணீரில் ஊறவைக்கவும் ( 30 நிமிடங்கள் ).
  3. இப்போது ஒரு கிலோ அரிசி சமைக்க போதுமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும், அதன் அளவில் 3/4 தண்ணீர் சேர்க்கவும், பின்னர் அரிசியில் குறிப்பிடப்பட்ட அனைத்து கரம் மசாலாக்களையும் மற்றும் உப்பு ஆகியவற்றை தண்ணீரில் சேர்த்துக் கொள்ளவும்.
  4. தண்ணீர் கொதித்தவுடன் ஊறவைத்த அரிசியை கவனமாக சேர்க்கவும், அரிசி 3/4 பங்கு வேகும் வரை வேகவிடவும். பின்னர் வடிகட்டியில் போட்டு, தண்ணீரை அகற்றிவிட்டு அரிசியை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
  5. அதே பாத்திரத்திலோ அல்லது வேறு பாத்திரத்திலோ சிறிது எண்ணெய் தடவிக் கொண்டு கோழிக்கறியை சமமாகவும் பரவலாக போட்டு ஒரு கப் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும், இப்போது சிக்கனின் மீது வேகவைத்த அரிசியை முழுவதையும் பரவலாக கொட்டிக் கொள்ளுங்கள்.
  6. பின் ஒரு கரண்டியால் அரிசியில் 4 துளையிட்டுக் கொள்ளவும்.( பாத்திரத்தின் அடிப்பகுதி வரை துளையிட வேண்டும்)
  7. பின்னர் அதில் அனைத்து அலங்கார பொருட்கள் வைத்து அலுமினிய பாயில் கொண்டு அவற்றை முற்றிலும் காற்று வெளியே செல்லாத அளவிற்கு ஒரு மூடியைக் கொண்டு மூடவும்.
  8. பிரியாணி பாத்திரத்தின் மீது சிறிது கனமான பொருளை வைப்பதன் மூலம் நீராவியை வெளியே செல்லாமல் உள்ளே தக்க வைத்துக் கொள்ளலாம்.
  9. முதல் 10 நிமிடங்கள் அதிக தீயில் அதை வேகவைக்கவும் பின் அடுத்த 10 நிமிடம் குறைவான தீயில் வேகவிடவும்.
  10. வேகவைத்த முட்டை, பச்சை கொத்தமல்லி, புதினா இலைகள் மற்றும் பிரவுன் ஆணியன் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்