வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சேவை

Photo of Coconut Sevai by Janaki Priya at BetterButter
1171
3
0.0(0)
0

தேங்காய் சேவை

Oct-10-2017
Janaki Priya
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் சேவை செய்முறை பற்றி

காலை மறறும் மாலை சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உதிர் இடியாப்பம்/ ரெடிமேட் அரிசி சேவை - 2  கப் (நான் வீட்டில் தயாரித்த இடியாப்பத்தை உபயோகித்தேன்)
  2. துருவிய தேங்காய் - 1 கப்
  3. எண்ணெய் -2 தேக்கரண்டி
  4. கடுகு - 1/4 தேக்கரண்டி
  5. உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  6. கடலை பருப்பு- 1 தேக்கரண்டி
  7. சிகப்பு மிளகாய்- 3
  8. பச்சை மிளகாய்- 3
  9. பெருங்காயத்தூள் - சிறிதளவு
  10. துருவிய இஞ்சி - சிறிதளவு
  11. கறிவேப்பிலை- சிறிதளவு

வழிமுறைகள்

  1. வீட்டில் தயாரித்த இடியாப்பத்தை உபயோகிப்பதாக இருந்தால் அது ஆறிய பின் சிறிது சிறிதாக உதிர்த்து வைத்து கொள்ளவும்.
  2. ரெடிமேட்  சேவையை உபயோகிப்பதாக இருந்தால் அதில் குறிப்பிட்டுள்ள படி வேக வைத்து எடுக்கவும்.
  3. சூடான வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு சேர்த்து, அது பொரிந்தவுடன், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை, சிகப்பு மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்
  4. பின் இதனுடன் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி துருவலையும் சேர்த்து வதக்கவும்.
  5. தற்போது துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அதனுடைய பச்சை வாசனை போகும் வரை மிதமான சூட்டில் வதக்கவும். தேங்காய் கருகாமல் பார்த்து கொள்ளவும்.
  6. பின் இதனுடன் உதிர்த்த இடியாப்பம்/ சேவையை சேர்த்து கிளறவும். தீயை அணைத்து பின் அப்படியே 5 நிமிடம் வரை மூடி வைக்கவும்.
  7. சுவையான தேங்காய் இடியாப்ப சேவை தயார். இதனை தேங்காய் சட்னி அல்லது காரமான தக்காளி சட்னி உடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்