வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் டிரை ப்ரூட்ஸ் லட்டு

Photo of Coconut dry fruits laddu by Krishnasamy Vidya Valli at BetterButter
393
3
0.0(0)
0

தேங்காய் டிரை ப்ரூட்ஸ் லட்டு

Oct-10-2017
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் டிரை ப்ரூட்ஸ் லட்டு செய்முறை பற்றி

சீனியில்லா சத்து நிறைந்த இனிப்பு வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • ப்லெண்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தேங்காய் துருவல் - 2 கப்
  2. பேரீச்சம்பழம் - 2 கப்
  3. முந்திரி பருப்பு - 1 கப்
  4. பாதாம் பருப்பு - 1 கப்
  5. கிஸ்மிஸ் - 1 கப்
  6. நெய் - 2 தேக்கரண்டி
  7. ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. முந்திரி பருப்பு, கிஸ்மிஸ், பாதாம் மூன்றையும் கரகரப்பாக திரிக்கவும்
  2. பேரீச்சம்பழத்தை தனியாக கரகரப்பாக அரைக்கவும்
  3. கடாயில் ஒரு தேக்கரண்டி நெய்யை விட்டு தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக ஈரபசை போகும் வரை கிளறவும்
  4. கடாயில் ஒரு தேக்கரண்டி நெய்யை விட்டு சூடாக்கவும்
  5. கரகரப்பாக திரித்த முந்திரி, கிஸ்மிஸ், பாதாம் சேர்த்து கிளறவும்
  6. அரைத்த பேரீச்சம்பழத்தை சேர்த்து வதக்கவும் . விருப்பப்பட்டால் ஏலக்காய் பொடி சேர்க்கவும்
  7. தேங்காய் துருவலில் அரை கப் தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள தேங்காய் துருவல், மற்றும் நன்கு வதக்கிய டிரை ப்ரூட்ஸ் கலவை சேர்த்து லட்டு பிடிக்கவும். தேவைப்பட்டால் கையில் நெய் தடவிக்கொள்ளவும்
  8. தனியாக வைத்த தேங்காய் துருவலில் பிடித்த லட்டுகளை பிரட்டி எடுத்தால் சுவையான ஆரேக்கியமான ஷூகர்ப்ரீ லட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்