வீடு / சமையல் குறிப்பு / கிண்ணத்தப்பம்

Photo of Kinnathappam by Ayesha Ziana at BetterButter
1421
3
0.0(0)
0

கிண்ணத்தப்பம்

Oct-11-2017
Ayesha Ziana
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கிண்ணத்தப்பம் செய்முறை பற்றி

தேங்காய்ப்பாலை மையமாக வைத்து செய்யப்படும் பாரம்பரியமான புட்டிங்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • கேரளா
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சரிசி 1/4 கப்
  2. கஞ்சிக்கரிசி 1/4 கப்
  3. தேங்காய் 1/2 (மீடியம் சைஸ்)
  4. முட்டை 1
  5. சீனி 1/2 முதல் 3/4 கப்
  6. ஏலம் 1 முதல் 2
  7. உப்பு ஒரு பின்ச்
  8. சீரகம் தேவைக்கு, மேலே தூவ
  9. நெய் தட்டில் தடவ

வழிமுறைகள்

  1. பச்சரிசியையும் கஞ்சிக்கரிசியையும் நன்றாக அலசி 2-3 மணி நேரம் சேர்த்து ஊற வைக்கவேண்டும்.
  2. தேங்காயைத் துருவி பால் பிழியவும். கிடைக்கும் பாலில் தலை பால் 1 கப், மற்றும் 2ஆம் பால் 1 கப் உபயோகிக்க வேண்டி வரும்.
  3. ஊற வைத்த அரிசியில் உள்ள தண்ணீர் வடித்து விட்டு, மிக்ஸியில் 2ஆம் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரிசியை மை போல அரைக்க வேண்டும். இதை வடிகட்டி ஒரு பௌலில் ஊற்றவும்.
  4. முட்டையையும் சீனியையும் மிக்ஸியில் நன்றாக அரைத்து அதையும் பௌலில் ஊற்றவும்.
  5. தலை பால், தட்டிய ஏலக்காய், உப்பு இவற்றையும் பௌலில் சேர்த்து நன்றாக கலக்கவும். மாவு நீர்மத்தன்மை உடையதாக இருப்பது அவசியம்.
  6. ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் நெய் தடவி, பௌலில் உள்ள கலவையை ஊற்றி, இட்லி அண்டாவில் சிறிது தண்ணீர் ஊற்றி, ஸ்டீல் பாத்திரத்தை அதில் வைத்து, ஆவியில் முதலில் ஒரு 5 நிமிடம் வேக வைக்கவும்.
  7. பின்னர், இட்லி அண்டா மூடியைத் திறந்து, கலவை மேல் சீரகத்தைத் தூவி, மீண்டும் மூடி வைத்து மேலும் 15 நிமிடம் வேக விட வேண்டும்.
  8. பின்னர் ஸ்டீல் பாத்திரத்தை வெளியில் எடுத்து, கிண்ணத்தப்பத்தை ஆற விடவும். ஆவி தண்ணீர் மேலே படர்ந்திருந்தால் கவலை வேண்டாம், ஆறியதும் தண்ணீர் தானே வற்றி விடும்.
  9. சின்ன துண்டுகளாக்கி பரிமாறவும். சூப்பரான கிண்ணத்தப்பம் தயார். இது கன்னியாகுமரி மற்றும் கேரளாவின் பாரம்பரிய இஸ்லாமியர் இனிப்பு உணவுகளில் ஒன்று.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்