Photo of Prawn Coconut Stir fry by Ayesha Ziana at BetterButter
303
4
0.0(1)
0

Prawn Coconut Stir fry

Oct-11-2017
Ayesha Ziana
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Prawn Coconut Stir fry செய்முறை பற்றி

இறால், தேங்காய் மற்றும் மசாலா சேர்த்து பிரட்டிய சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இறால் 1/2 கப்
  2. தேங்காய் 1 1/2 டேபிள் ஸ்பூன்
  3. வெங்காயம் 1
  4. தக்காளி 1/2
  5. இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
  6. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  7. கரம் மசாலா 1 தேக்கரண்டி
  8. மிளகு தூள் 2 தேக்கரண்டி
  9. மல்லி தழை சிறிது
  10. எண்ணெய் தேவைக்கு
  11. உப்பு தேவைக்கு
  12. கடுகு 1 டேபிள் தேக்கரண்டி
  13. கறிவேப்பிலை 1 கொத்து
  14. காய்ந்த மிளகாய் 1

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறி வேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  2. வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, உப்பு ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. மிளகாய் தூள், இறால் சேர்த்து லேசாக வதக்கவும்.
  5. பின்னர் கரம் மசாலா, மல்லி தழை சேர்த்து கலந்து, மூடி வைத்து 7 நிமிடம் சிம்மில் வேக வைக்கவும்.
  6. மிளகு தூள் சேர்த்து மீண்டும் 2 நிமிடம் வேக வைக்கவும். அடுப்பை அணைத்து சாதம், குழம்புடன் பரிமாறவும். மிகவும் சுவையான இறால் தேங்காய் பிரட்டல் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Saranya Manickam
Nov-02-2017
Saranya Manickam   Nov-02-2017

too perfect..

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்